puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 25 பிப்ரவரி, 2013

அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் சிறுவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் அபாயம்


அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் சிறுவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் அபாயம்


February 25, 2013  03:59 pm
அதிகமாக டிவி பார்க்கும் சிறுவர்கள், எதிர்காலத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பு அதிகம் என, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
நியூசிலாந்தில் உள்ள, ஒட்டாகோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அந்நாட்டில் உள்ள டுனெடின் நகரத்தில், 1972-73 ஆண்டுகளில் பிறந்தவர்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். ஐந்து முதல், 15 வயதாகும் வரை, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, அவர்களின் டிவி பார்க்கும் அளவு கண்காணிக்கப்பட்டது. அதிகமாக டிவி பார்க்கும் பழக்கம் கொண்டவர்களிடையே, அவர்கள் பெரியவர்களானதும் குற்றச்செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு, 30 சதவீதம் அதிகமாக இருந்ததை, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.


மேலும், அவர்களிடையே முரட்டுத்தனம் மற்றும் சமூக விரோத நடவடிக்கை போன்ற எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டுள்ளதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்து உள்ளது.

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: சிறுவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் பல்வேறு வகையான நிகழ்வுகள், பிற்காலத்தில் அவர்கள் வாழ்வில் அழுத்தமான விளைவுகளை ஏற்படுத்த வல்லவை. அந்த வகையில், அதிகமாக "டிவி´ நிகழ்ச்சிகளை பார்த்து வளரும் சிறுவர்கள், பெரியவர்களாகும் போது, அவர்களிடம் சமூக விரோத மற்றும் குற்ற நடவடிக்கைள் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் டிவி´ பார்ப்பதால் மட்டும் தான், குழந்தைகளிடம் சமூக விரோத எண்ணங்கள் வளர்கின்றன என, நாங்கள் சொல்லவில்லை. 

எனினும், குழந்தைகள் மற்றும் இளம்வயதினர் "டிவி´ பார்க்கும் நேர அளவை குறைத்தால், சமூகவிரோத செயல்கள் குறைய வாய்ப்புள்ளது ஒரு நாளில், "டிவி´யில் ஒளிபரப்பாகும் நல்ல நிகழ்ச்சிகளை ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மட்டும் குழந்தைகள் பார்ப்பது நல்லது .
இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

thamilan thanks


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக