தமிழ்நாடு
முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிடும் கண்டன
அறிக்கை:
ஆந்திர
மாநிலம் ஹைதராபாத்தில் இன்று இரவு மூன்று இடங்களில் நடைபெற்ற தொடர்
குண்டுவெடிப்புகளில் 10க்கும் அதிகமானோர் உயிரிழந்த செய்தியை அறிந்து அதிர்ச்சி
அடைந்தோம்.
இப்பயங்கரவாதத்தை
வன்மையாகக் கண்டிக்கிறோம். உயிர் இழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த
இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதுபோன்ற
இக்கட்டான சூழலில் அனைத்து தரப்பு மக்களும் அமைதிக் காத்து, சட்டம் ஒழுங்கைக்
காத்திட ஆந்திர அரசுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஆந்திர
மாநில காவல் துறையும், உளவுத் துறையும் மதச்சாயம் பூசி யாரையாவது கைது செய்து
வழக்கை முடிக்க முயலாமல், நிதானமாக ஆராய்ந்து, உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய
கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன்
(ஜே.எஸ்.ரிபாயீ)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக