- Wednesday, 27 February 2013 07:54
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இரும்புச் சங்கிலியால் இலங்கை தூதரகத்தின் முன் புற இரும்புக் கதவைப் பூட்ட முயன்றனர்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டதாக வெளியான செய்தி உலகம் முழுமையும் உள்ள தமிழர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.
இந்த நிலையில் தலைநகர் கோலாலம்பூரில் ஒன்று கூடிய அரசு சார்பற்ற அமைப்புகள் பாலச்சந்திரன் படுகொலை சம்பவத்திற்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பொறுப்பேற்க வேண்டும் என கோரி இலங்கை தூதரகத்திற்கு முன் முற்றுகை போராட்டம் நடத்த தீர்மானித்தனர்.
பாலச்சந்திரன் படுகொலை தொடர்பில் ராஜபக்சே நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோலாலம்பூரிலுள்ள இலங்கை தூதரகம் மூடப்பட வேண்டும் எனவும் முழக்கமிட்ட அவர்கள் இரும்புச் சங்கிலியால் தூதரகத்தின் முன் வாசல் கதவை பூட்டுவதற்கு முயன்றனர்.
பிற்பகல் 1 மணியளவில் கைது செய்யப்பட்ட மூவர் விடுவிக்கப்பட்ட பின்னர், அங்கு திரண்டவர்கள் அமைதியான முறையில் கலைந்து சென்றனர். இலங்கையில் இனப்படு கோலை நடந்திருப்பதை பாலசந்திரனின் கொலை சம்பவம் தக்க சான்றாக அமைந்திருக்கிறது என்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பூச்சோங் முரளி, யு.தாமோதரன், தமிழன் உதவும் கரங்கள் முரளி, சுங்கைவே சாமி, பிகேஆர் சுரேஷ், மைக்கல், பொன்ரங்கன் ஆகியோர் நிருபர்களிடம் தெரிவித்தனர்.
ஈழத்தில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது உலக வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாக அமைந்திருக்கின்றது. இந்த இன அழிப்புக்கு காரணமான ராஜபக்சே நீதிக்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் வரையில் எங்களுடைய போராட்டம் ஓயாது என்று முரளி குறிப்பிட்டார்.
4தமிழ்மீடியாவிற்காக : மலேசியாவிலிருந்து இளவரசி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக