puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 25 பிப்ரவரி, 2013

ஐநாவின் மனித உரிமைக்குழுவில் வடகொரியா, மாலி, சிரியா பிரச்சனைகள் விவாதிக்கப்படும்


[ திங்கட்கிழமை, 25 பெப்ரவரி 2013, 02:50.38 பி.ப GMT ]
ஐநாவின் மனித உரிமைக்குழுவின் 2ஆவது கூட்டம் இன்று தொடங்கி, மார்ச் 22ம் திகதி வரை நடக்கும் இக்கூட்டத்தில் அமைச்சர்களும், முக்கியஸ்தர்களும் உள்பட சுமார் நூறு பேர்கள் கலந்துகொள்கிறார்கள். இக்கூட்டத்தில் மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கைகளைப் பற்றி விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதலாவதாக ஜப்பானும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து வடகொரியாவில் சிறையில் அவதிப்படும் 20,000 பேரின் இரக்கமற்ற நிலை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறிவருகிறது.
இரண்டாவதாக பிரான்ஸ், மாலியில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் பிரெஞ்சு ராணுவம் அங்கிருந்து வெளியேறிய பின்னரும் தொடரும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு உடனடியாக ஆட்களை அனுப்பி நிலைமையை ஆராய வேண்டும் என்று ஐநாவின் மனித உரிமைக் குழுவைக் கேட்டுக் கொண்டுள்ளதால் இது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
இதை தொடர்ந்து ஸ்ரீலங்காவின் நிலைமைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் பொதுநலத் தொண்டு நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
மேலும் சிரியாவில் நடந்த உள்நாட்டுப் போரில் 70,000 பேர்கள் உயிரிழந்துள்ளதையடுத்து 8,50,000 நபர்கள் அகதிகளாப் போய்விட்டதால் அங்கேயே தங்கியிருக்கும் நான்கு மில்லியன் பேருக்கு அடிப்படைத் தேவைகளுக்கான உதவிகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
ஐநாவின் மனித உரிமைக் குழுவின் தலைவியான நவி பிள்ளையும்(Navi Pillay) இப்பிரச்சனைகள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
newsonews. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக