February 23, 2013 05:49 pm
வேறு ஒரு பெண்ணுடன் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்த
ரஷ்ய பெண் ஒருவர் தன்னுடைய காதலனுக்கு குட்பை சொல்லி காதலை
முறித்துக்கொண்டுள்ளார்.
கூகுள் நிறுவனம் ஸ்டிரீட் வியூ என்ற வசதியை வைத்துள்ளது.
இதன் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களின் தெருக்களையும்
தெளிவாக காண முடியும்.
ரஷ்யாவைச் சேர்ந்த மரினா வாய்னோவா என்ற பெண் இந்த
வசதியைப் பயன்படுத்தி தனது
காதலனை கையும் களவுமாக பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் வழக்கம் போல் இந்த வசதியைப் பயன்படுத்தி தனக்கு
தேவையான தகவல்களை கூகுள் மேப்பில் உள்ள ஸ்டிரீட் வியூயை பார்த்துக்
கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி ஏற்படும் வகையில் தனது காதலன் வேறு
ஒரு பெண்ணுடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனால் கோபமடைந்த இவர் உடனடியாக தனது காதலனை தொடர்பு
கொண்டு பேசினார். அப்போது அவர் பொய் கூறவே,
உண்மையை தான் கண்டுபிடித்து விட்டதைக் கூறி சத்தம் போட்டார். பின்னர் தனது காதலனுடான உறவை
முறித்துக்கொண்டார். காதலன் மன்னிக்குமாறு கெஞ்சியபோதும் இவர்
சமாதனமடையவில்லையாம்.
thamilan thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக