- Friday, 22 February 2013 13:41
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரப்போகும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளதாக தமிழ்நாட்டு காங்கிரஸ் எம்.பிக்கள் கூறியுள்ளனர்
.
சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான தமிழ்நாட்டு காங்கிரஸ் எம்.பிக்கள் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தனர். பின்னர் இச்சந்திப்பு குறித்து நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையில், ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பில் பிரதமரிடம் நாங்கள் நீண்ட நேரம் பேசினோம்.
எங்களது கருத்துக்களை பொறுமையாக கேட்ட பிரதமர், கடந்த முறை போன்று இம்முறையும் இலங்கைக்கு எதிராகவே நாம் எமது நிலைப்பாட்டை மேற்கொள்வோம் என உறுதி அளித்துள்ளதாகவும் அதே போன்று இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிக உரிமைகளை பெற்றுத்தருவதற்கும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும் என உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்
.4tamilmedia. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக