Wednesday, 20 February 2013 15:32
மனிதநேய
மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை
அறிக்கை:
காவிரி
நடுவர் மன்றத் தீர்ப்பினை, உச்ச நீதிமன்ற வழிகாட்டலின்படி அரசிதழில் வெளியிட்ட
மத்திய அரசின் முடிவை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது.
இம்முடிவு
தமிழக அரசின் உறுதியான நடவடிக்கைகளுக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும். மத்திய
அரசின் நடவடிக்கை காவிரிப் பாசன விவசாயிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக
மக்களையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
கர்நாடக
அரசு இம்முடிவை அமல்படுத்த மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன்
(எம்.
தமிமுன் அன்சாரி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக