
February 2,
2013 03:49 pm
இந்தியாவில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் வேலைக்கு ஒசாமா பின்லேடன்
அப்ளை செய்திருக்கிறார். அவருடைய அப்பாவின் பெயர் பில் கிளிண்டன்
என்பதுதான் இதில்
வேடிக்கையான விசயம்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிகளுக்கு
ஆசிரியர் காலியிடங்களுக்காக விளம்பரம் செய்யப்பட்டது. அப்போது ஒசாமா
பின்லேடனின் பெயரில்
ஆன்லைனில் விண்ணப்பம் வந்திருந்தது. ஆச்சரியகரமாக,
இந்த பின்லேடன் அனைத்து பாடங்களிலும் 100
மதிப்பெண்கள் பெற்றதாக விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து,
ஒசாமா பின்லேடனுக்கு விண்ணப்பம் பெற்றுக்
கொள்ளப்பட்டதற்கான பதிவு
இலக்கம், மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும்போது,ஒரிஜினல் சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என்ற கடிதமும்,
விண்ணப்பத்தில் பின்லேடன் குறிப்பிட்ட முகவரிக்கு,
உத்தரபிரதேச அரசால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.50
லட்சம் போலி விண்ணப்பங்கள்
"உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு ஆரம்ப
பள்ளிகளுக்கு, 72,825 ஆசிரியர் காலியிடங்களுக்காக விளம்பரம் செய்யப்பட்டது. 70லட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. அவற்றில்,
சுமார் 20
லட்சம் விண்ணப்பங்கள்தான் நிஜமானவை என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஒசாமாவும் போலிதான் அதேபோல் ஒசாமா பின்லேடன் விண்ணப்பமும் போலியானது என்று
தங்களுக்குத் தெரியும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அதில் அப்பாவின்
பெயர் பில் கிளிண்டன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த முகவரியும்
போலியானதுதான் என்று
உ.பி. அதிகாரிகள் கூறியுள்ளனர். கட்டாயம் நம்பர் தரணும் அரசு நடைமுறைப்படி,
தங்களுக்கு வந்துள்ள விண்ணப்பத்தை பதிவு செய்து,
ஒசாமா பின்லேடன் பெயரில் பதிவு இலக்கம் கொடுத்தே ஆகவேண்டியது
கட்டாயம்" என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நல்ல வேளை இப்போ ஒசாமா பின்லேடன் உயிரோடு இல்லை.
thamilan thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக