Tuesday, 12 February 2013 19:13
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும்
அறிக்கை:
காரைக்காலைச் சேர்ந்த பெண் இன்ஜீனியர் வினோதினி உயிரிழந்த சம்பவத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தோம். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
தனக்கு கிடைக்காத ஒரு பெண் உயிரோடு இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் சுரேஷ் என்ற மனித மிருகம் நடத்திய ஆசிட் வீச்சால் அந்த அப்பாவிப் பெண் சுமார் மூன்று மாதங்களாக மரண வேதனை அடைந்து இன்று உயிர் இழந்துள்ளார்.
வினோதினியின் மரணத்திற்கு காரணமான அந்த மனித மிருகம் சுரேஷிற்கு, அந்தப் பெண் வேதனை அடைந்ததைப் போலவே ஆசிட் வீசி கொல்ல வேண்டும் என்று நாம் விரும்பினாலும், இந்தியச் சட்டங்களில் அதற்கு இடமில்லை. எனவே சட்டங்களைத் திருத்தி, இதுபோன்ற மனித மிருகங்களுக்கு கொடூர தண்டனை வழங்க வேண்டும்.
இந்த வழக்கில், சுரேஷிற்கு உதவியவர்களை வழக்கில் சேர்க்கவில்லை என்று வினோதினியின் பெற்றோர் கூறியுள்ளனர். அவர்களது இந்தக் குற்றச்சாட்டை கவனத்தில் கொண்டு சுரேஷிற்கு உதவிய அவரது நண்பர்கள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்களையும் இவ்வழக்கில் சேர்த்து, அனைவருக்கும் படிப்பினை தரத்தக்க வகையில் மிகக்கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக