லங்கா முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகளுக்கும் கண்டி
மல்வத்து பீட மகாநாயக்க தேரரான திப்பட்டுவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரருக்கும்
இடையிலான சந்திப்பொன்று இன்று காலை கண்டியில் இடம்பெற்றுள்ளது.முஸ்லிம்களுக்கு
எதிராக நாட்டில் தற்போது இடம்பெற்றுவரும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் இதன் போது மல்வத்து
மகாநாயக்க தேரரின் கவனத்துக்கு முஸ்லிம் கவுன்சில் தரப்பினரால் கொண்டுவரப்பட்டதாக
தெரிவிக்கப்படுகிறது.
ஹலால் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
வெளியிட்ட அறிக்கையினை வரவேற்ற அவர், அரசாங்க நிறுவனமொன்றிடம் ஹலால் சான்றிதழ்
வழங்கும் நடவடிக்கையை கையளிப்பது சிறந்தது எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த சந்திப்பில் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன்,ஜாமியா நளீமியா
கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி முன்னாள் ஈரானிய தூதுவர்
எம்.எம். சுஹைர், ,ஜனாதிபதி சட்டத்தரணிகளான சிப்லி அசீஸ், இக்ரம் முஹம்மத்,மெளலவி
இப்ராஹீம்,டாக்டர் நவுபர், தஹ்லான் , முர்சித் ஆகியோர் பங்குகொண்துள்ளனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் கடத்த மாதங்களாக அரசியல்வாதிகள் , சிங்கள பெளத்த பிரமுகர்கள் , பெளத்த மத குருமார் ஆகியோரை சந்தித்து வருகிறது . அதேவேளை மாதம் ஒருமுறை ஹெல உரிமைய பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
/lankamuslim thanks