
February
13, 2013 05:17 pm
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் பலியான
மக்களின் எண்ணிக்கை 70
ஆயிரத்தை நெருங்குகிறது ஐ.நா. மனித
உரிமைகள் சபையின் தலைவர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
சிரியா
அதிபர் பஷர் அல்-அசாத் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு மக்கள் கடந்த2 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ராணுவத்தை ஏவி போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்க சிரியா
அதிபர் முயன்று வருகிறார். போராட்டக்காரர்களில் சிலரும் ஆயுதம் ஏந்தி அரசு
படைகளை எதிர்த்து போராடி வருகின்றனர்.
இதனால், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் துப்பாக்கி சண்டை, பீரங்கி
தாக்குதல் போன்றவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இத்தாக்குதல்களில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர்
வீடுகளை இழந்து வெளிநாடுகளில் தஞ்சமடைந்து இருக்கிறார்கள்.
சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போர் குறித்து கடந்த
மாதம் கருத்து தெரிவித்த ஐ.நா. மனித உரிமை சபையின் தலைவர் நவநீதம்
பிள்ளை, ´சிரியா
போரில் இதுவரை 60
ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்´ என
கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று
நடைபெற்ற மனித உரிமை சபை கூட்டத்தில் ஆயுத போராட்டம் நடைபெறும்
சூழ்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு என்ற தலைப்பில் பேசிய அவர்
கூறியதாவது:-
சிரியாவில் இருதரப்பினருக்கும் இடையே கருத்து ஒற்றுமை
ஏற்படாத நிலையில் அனைத்து தரப்பு மக்களும் கடுமையான விலையாக
தங்களது உயிர்களை இழந்து வருவது பெருகியுள்ளது. நம் கண்
முன்னர் நடைபெறும் இந்த பேரழிவில் பலியான மக்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
thamilan. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக