puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 21 பிப்ரவரி, 2013

ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் தொடர் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி-பதட்டம்


ஐதராபாத், பிப். 21-

ஆந்திரா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள தில்சுக் நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையத்தில் இன்று மாலை 7 மணியளவில் சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. அதே நேரத்தில் கோனார்க் தியேட்டர் அருகிலும் குண்டுவெடித்தது. மற்றொரு இடத்திலும் குண்டு வெடித்துள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசாரும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்து மேலும் குண்டுகள் இருக்கின்றனவா என்று சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த குண்டுவெடிப்புகளில் 7 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 50 பேர் காயம் அடைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் ஐதராபாத் முழுவதும் பதட்டம் நிலவி வருகிறது. போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

குண்டு வெடிப்பு நடந்ததாக தகவல் அறிந்ததும் முதல்வர் கிரண்குமார் ரெட்டி உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஐதராபாத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நகரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 

maalaimalar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக