puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 21 பிப்ரவரி, 2013

6 லட்சம் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாவிட்டால் விரைவில் இரயில் மறியல்



[ வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2013, 12:15.15 AM GMT +05:30 ] [ மாலைமலர் ]
இந்தியாவில் 2013ம் ஆண்டிற்கான இரயில்வே பட்ஜெட் வரும் 26ம் திகதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், தேசிய இரயில்வே மல் கொடாம் ஷர்மிக் சங்கத்தின் பொதுச் செயலாளர் அருண்குமார் பாஸ்வான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடெங்கும் உள்ள இரயில்வே கிடங்குகளில் நீண்ட காலமாக சுமார் 6 லட்சம் சுமை ஏற்றி, இறக்கும் தொழிலாளர்கள் தற்காலிக ஊழியர்களாக வேலை செய்து வருகின்றனர்.
இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பலகாலமாக எங்கள் சங்கம் போராடி வருகிறது. ஆனால், மத்திய அரசு வெறும் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கிறது. பல காலமாக பொறுமை காத்துவந்த நாங்கள், இப்போதாவது அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.
வரும் 26ம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள இரயில்வே பட்ஜெட்டில் எங்கள் நீண்டகால கோரிக்கையான 6 லட்சம் சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர்களை மத்திய அரசு பணி நிரந்தரம் செய்து அறிவிக்க வேண்டும்.
இல்லையென்றால், வரும் 27ம் திகதி எங்கள் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து, விரைவில் நாடு தழுவிய இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம். தற்போது நடைபெற்று வரும் 2 நாள் வேலை நிறுத்தத்திலும் எங்கள் சங்கம் பங்கேற்றுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

newindianews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக