ராமநாதபுரம், பிப். 12-
ராமநாதபுரம் அருகே உள்ளது உச்சிபுளி. இங்கு ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ரெயில்வே கேட் அமைந்துள்ளது. இன்று காலை 11.30 மணி அளவில் திருச்சியில் இருந்து ராமேசு வரம் செல்லும் பாசஞ்சர் ரெயிலுக்காக ரெயில்வே கேட் அடைக்கப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து சாலையின் இருபுறமும் மோட்டார் சைக்கிள்கள், கார்கள் அணிவகுத்து நின்றன. அப்போது திருச்சியில் இருந்து வந்த பாசஞ்சர் ரெயில் ரெயில்வே கேட்டை கடந்து சென்றபோது மண்டபத்தில் இருந்து மின்னல் வேகத்தில் வந்த சரக்கு வேன் ஒன்று பிரேக் பிடிக்காமல் ரெயில்வே கேட் அருகே மோட்டார் சைக்கிள்களில் நின்ற 3 வாலிபர்கள் மீது மோதிவிட்டு ரெயில்வே கேட் மீது மோதியது.
இதில் ரெயில்வே கேட் சுக்குநூறாக உடைந்து சிதறியது. கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில் கடந்து சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் நின்ற மண்டபம் மேற்கு தெருவைச் சேர்ந்த ரபீக் (வயது30), சாகுல் அமீது (42), கார்மேகம் (21) மற்றும் சரக்கு வேன் டிரைவர் இந்திரஜித் (40) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த 4 பேரும் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ரபீக் இறந்தார். விபத்தில் காயம் அடைந்த சாகுல் அமீது, இறந்துபோன ரபீக்கின் அண்ணன் ஆவார். இவரது நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது. இதனை தொடர்ந்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் உடைந்துபோன ரெயில்வே கேட்டை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக