February
27, 2013 04:33 pm
அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர் ´கிளிவே
பால்மர்´. 895
மில்லியன் டாலர்
மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கும் இவர், 1912-ம்
ஆண்டு கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைப் போன்ற புதிய கப்பலை
உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
நேற்று
நியூயார்க் நகரத்திலுள்ள இன்டர்பிட் சீ அருங்காட்சியகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இதனைத் தெரிவித்தார். இந்த கப்பல் கட்டும் பணி
சீனாவில் விரைவில் தொடங்க இருப்பதாகவும், இது
2016-ம்
ஆண்டு இது முடிவடைந்து பயணிகள் இதில்
பயணத்தை மேற்கொள்ளாம் என்றும் அவர் கூறினார்.
இந்தக்
கப்பலின் முதல் பயணத்தின் டிக்கெட்டுகளை வாங்க 40 ஆயிரம்
பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். டைட்டானிக் கப்பலைப் போலவே இந்த புதிய கப்பலும் இங்கிலாத்தில் உள்ள
சவுதாம்ப்டன் என்ற பகுதியிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரம் வரை முதல்
பயணத்தை மேற்கொள்ளும்.
இந்த
கப்பலில் பயணிப்பவர்கள் அனைவரும் 1912-ம்
ஆண்டில் இருந்த
பழைய பாணி உடைகளை
அணிவார்கள். அவர்களுக்கு டைட்டானிக் கப்பலில் வழங்கப்பட்ட அதேவிதமான உணவுகளே
பரிமாறப்படும்.
´டைட்டானிக்-2´ கப்பலை
உருவாக்கும் பின்லாந்தை சேர்ந்த வடிவமைப்பாளர் கூறுகையில், இதுவே
உலகின் மிகப் பாதுகாப்பான கப்பலாக இருக்கும்.´ என்றார்.
1912-ம்
வருடம் ஏப்ரல் 15-ம்
திகதி டைடானிக் கப்பல் 2200 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது வடக்கு அட்லாண்டிக் பகுதியிலிருந்த
பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இதில் 700 பேர்
மட்டுமே உயிர் தப்பித்தனர். இந்த விபத்தே கடல்
பயண வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான விபத்தாகும்
./thamilan thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக