puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

தமிழகத்திற்கு 14 புதிய ரயில்கள் அறிவிப்பு ! சரக்கு கட்டணம் உயர்கிறது ; ரயில்வே பட்ஜெட் தாக்கல்



ஆல்பம்
புதுடில்லி: 2013 - 2014 ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வேதுறை அமைச்சர் பார்லி.,யில் இன்று தாக்கல் செய்தார். உரையாற்ற துவங்கியதும், ரயில்வே துறை இந்த நாட்டின் முக்கிய பணியை செய்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருப்பது ரயில்வே துறை எனறார்.
தமிழகத்தில் புதிதாக 14 ரயில்கள் இயக்கப்படும் என்றும், சென்னையில் இருந்து பழனி மற்றும ஷீரடி கோயிலுக்கு புதிய ரயில் இயக்கப்படும் என்றும் இன்றைய பட்ஜெட்டில் அமைச்சர் பன்சால் தெரிவித்தார். நஷ்டஙகள் இருந்தாலும் கட்டண உயர்வு இல்லை என்றும் அறிவித்தார்.

அமைச்ரின் உரையில் முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு:


* ரயில்வே முக்கிய ஸ்டேஷன்களில் ஒய்பைவ் லைன்

* ரயில்வே துறையில் 22 ஆயிரத்து 500 கோடி இழப்பு

* பட்ஜெட் : ரயில்வே பாதுகாப்பை பலப்படுத்த திட்டம்

* ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்குகிறது; பன்சால்

* 17 ஆண்டுக்கு பின் காங்., தாக்கல் செய்யும் பட்ஜெட்

* யானைகள் பலியை தடுக்க முழுக்கவனம்

* புதியபாதைகள் - மின்வசதி பெருக்கப்படும்

*10 ஆயிரத்து 700 ஆள் இல்ல லெவல் கிராசிங்குகளை நீக்க முடிவு

* கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் இழப்பை ஈடுகட்ட முடியும்

* சமீப காலங்களில் ரயில்வே விபத்துக்கள் குறைந்துள்ன

* ரிசர்வேஷன் அலர்ட் எஸ்.எம்.எஸ் திட்டம் விரிவுப்படுத்தப்படும்

*மாறறுத்திறனாளிகளுக்கு கூடுதல் பணியிடம்

*தரமான உணவு வழங்கிட விலை உயர்த்த திட்டம்

* இ டிக்கெட் பணிகள் டிசம்பருக்குள் முடிவைடயும்



* ரயில் நீர் உற்பத்தி நிலையம் 6 இடங்களில் அமைப்பு

*ஆசாதி ரயில் சேவை இயக்க திட்டம்

* ரயில்வே உணவு தரத்தை பரிசோதிக்க கூடுதல் கவனம்

* உ பி,யில் ரயில் வார்ப்பட தொழிற்சாலை

* துறைமுகம்- ரயில்வேஇணைக்க 3ஆயிரத்து 800 கோடியில் திட்டம்

* மாற்றுத்திறனாளிகளுக்கு எஸ்கலேட்டர்

* இணையதள முன்பதிவு இரவு 11. 30 வரை நீடிப்பு



ஆன்மிக சுற்றுலா தலங்களுக்கு புதிய ரயில்கள்

தஞ்சாவூர்- புதுக்கோட்டைக்கு புதிய ரயில்பாதை

67 புதிய எக்ஸ்பிரஸ் ரயில் 26 புதிய பாசஞ்சர் ரயில்

ரயில்வே முக்கிய ஸ்டேஷன்களில் ஒய்பைவ் லைன்

* ரயில்வே பட்ஜெட் திட்ட மதிப்பீடு 63 ஆயிரத்து 363 கோடி

* ரயில்வே கட்டணம் மூலம் 42 ஆயிரத்து 210 கோடி திரட்ட முடிவு

* டீசல் மூலம் வரும் ஆண்டில் 5 ஆயிரத்து 100 கோடி இழப்பு வரும்

*சரக்கு ரயில் கட்டணம் மூலம் 93 ஆயிரத்து 554 கோடி திரட்ட முடிவு

* விளையாட்டு வீரர்களுக்கு கட்டணத்தில் சலுகை

*பயணிகள் கட்டணம் உயர்வில்லை: பன்சால்

* 1. 5 2 லட்சம் பணியிடங்கள் நிரப்ப இலக்கு

* ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பு அமைக்க ரூ . 300 கோடி

*ரயில் கட்டமைப்பில் புதிதாக அருணால் சேர்ப்பு

* துறைமுகம்- ரயில்வே ஸ்டேஷன் இணைக்க ரூ 3, 800 கோடி

* ரயில்வே ஸ்டேஷன் மேம்படுத்த ஆயிரம் கோடி

* செகந்திராபாத்தில் ரயில்வே நிதி நிர்வாகவியல் கல்லூரி

* சூரிய மின்சக்தி மூலம் ஆயிரம் ரயில்வே கேட் செயல்படுத்த திட்டம்



*பயணிகள் கட்டணம் உயர்வில்லை: பன்சால்

* கோவை - மன்னார் குடிக்கு புதிய ரயில்

*சென்னை- ஜோலார்பேட்டைக்கு புதிய ரயில்

*தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை இடையே புதிய ரயில்பாதை

* தமிழகத்திற்கு புதிதாக 14 ரயில்கள்



தமிழகத்திற்கு புதிதாக 14 ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவைகள்... சென்னை பீகானுருக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை காரைக்குடி இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் மற்றும் வாராந்திர ரயில் , சென்னையிலிருந்து சேலம் வழியாக பழநிக்கு தினசரி ரயில், கோவையிலிருந்து திருச்சி, தஞ்சை வழியாக மன்னார்குடிக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், கோவையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், சென்னையிலிருந்து வேளாங்கன்னிக்கு புதிய ரயில், சென்னை- தஞ்சை இடையே தினசரி ரயில், சென்னையிலிருந்து ஷீரடிக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் , நாகையிலிருந்து-பெங்களூருக்கு மதுரை திருச்சி வழியாக எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும். புதுச்சேரியிலிருந்து கன்னியாகுமரிக்கு புதிய ரயில் இயக்கப்படும் என கூறியுள்ளார்.

news dinamalar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக