| |
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் (Tehran)உள்ள கடைத்தெரு ஒன்றில், ஒரு நபரை 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் தாக்கி வழிப்பறி செய்யும் காட்சிகள் கடந்த டிசம்பர் மாதம் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் இந்த காட்சியைக் கண்டு திகைப்படைந்தனர். |
இதே
காட்சியை செய்தியாக அந்நாட்டின் தொலைக்காட்சியும் ஒளிபரப்பியது. இந்த வழிப்பறியில்
ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்ய ஈரான் அரசு உத்தரவிட்டது. அவர்கள் மீது விரைவு
விசாரணை நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேருக்கு மரண தண்டனையும், மேலும்
இருவருக்கு தலா 74 சவுக்கடியும், 10 ஆண்டு சிறை தண்டனையும்
விதிக்கப்பட்டது.
இதன்படி,
மரண தண்டனை விதிக்கப்பட்ட 24 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்களும், பொது இடத்தில்
தூக்கிலிடப்பட்டதாக ஈரான் வானொலி செய்தி வெளியிட்டது. சுமார் 300 பேர் முன்னிலையில்
இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் அச்செய்தி தெரிவித்தது.
eutamilar. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக