puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 7 ஜனவரி, 2013

சிரியா ஜனாதிபதி அசாத்துக்கு அமெரிக்கா பதிலடி (வீடியோ இணைப்பு)

[ திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 06:48.36 மு.ப GMT ]
மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாகவும், அடிமையாகவும் உள்ளவர்களுடன் பேச்சு நடத்த முடியாது என சிரியா ஜனாதிபதி பஷர் அல் அசாத் தெரிவித்துள்ளார். சிரியா ஜனாதிபதி பஷர் அல் அசாத் பதவி விலககோரி, புரட்சிபடையினர் கடந்த 22 மாதங்களாக போராடி வருகின்றனர். இவர்களை சிரிய இராணுவம் ஒடுக்கி வருகிறது.
புரட்சிபடையினருக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கி வருவதால், பல நகரங்களை கைப்பற்றியுள்ளதுடன் இராணுவ தளங்களையும் தகர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் அசாத் டமாஸ்கஸ் நகரில் உள்ள அரங்கொன்றில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நான் பதவி விலக வேண்டும் என்ற மேற்கத்திய நாடுகளின் கோரிக்கையை ஏற்க முடியாது.
வெளிநாடுகளின் தூண்டுதலால் சிரியா தற்போது போர்க்களமாக உள்ளது, ஒருவரையொருவரை கொல்லும் நிலை உள்ளது.
எதிர்தரப்பினருக்குத் தெரிந்ததெல்லாம் பயங்கரவாத மொழி தான். அவர்களுடன் நாங்கள் எப்படி பேசுவது.
மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாகவும், அடிமையாகவும் உள்ளவர்களுடன் பேச்சு நடத்த முடியாது, அறிவுப்பூர்வமானவர்களுடன் தான் பேச முடியும் என்று தெரிவித்தார்.
இதற்கு அமெரிக்காவின் வெளிவிவாகர பெண் செய்தி தொடர்பாளர் விக்டோரியா நூலண்ட் கூறுகையில், சிரியா ஜனாதிபதி அசாத்தின் பேச்சு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டுவதிலேயே குறிக்கோளாக உள்ளது என்றும், மக்களின் மாற்றத்திற்கு ஏற்றதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

newsonews. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக