puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 5 ஜனவரி, 2013

ஜும்ஆ பயான்: பெண்களின் பாதுகாப்பிற்கு இஸ்லாமிய வழிமுறையே தீர்வு



புதுவலசை:நமதூரில் அல் மஸ்ஜிதுல் ஜாமியா பள்ளியில் 04-01-2012 இந்த வார ஜும்ஆ தொழுகை நடைபெற்றது. இந்த ஜும்ஆவில் ஆலிம் சகோதரர் அஹமது அமீன் மிஸ்பாகி அவர்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் பாலியல் வன்முறைகளுக்கும், முறைகேடுகளுக்கும் இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றுவது தான் சரியான தீர்வு என்ற அடிப்படையின் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இக்கால பெண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி சஹாபி பெண்களின் வரலாறுகளை, நமது காலங்களில் தங்களது கண்ணியத்தை பாதுகாக்க இஸ்லாத்தை கேடயமாக பயன்படுத்திய சகோதரிகளின் வாழ்க்கையின் உதாரணங்களை மேற்கோள்காட்டி தெளிவான ஆதாரங்களுடன் கூடிய விழிப்புணர்வு உரை மிகவும் சிறப்பாகவும், இன்றைய காலகட்டத்திற்கு அவசியமானதாகவும் இருந்தது.

இன்றைய சூழ்நிலையில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்பதனை சமீபகாலமாக வந்து கொண்டிருக்கும் செய்திகள் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. அரசாங்கம் கூறும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது ஒரு கண்துடைப்பே என்ற எண்ணத் தோன்றுகிறது. ஆனால் இன்னும் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை. இன்று நடந்து கொண்டிருக்கும் பாலியல் வன்முறைகள் அதற்கு உதாரணம்.

பாலியல் வன்கொடுமையால் பச்சிளம் குழந்தைகள், இளம் பெண்கள், திருமணமான பெண்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பெண்கள்  பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுவது அன்றாட நிகழ்வாக மாறியுள்ளது வேதனைக்குறிய உண்மையாகும். பெண்களின் பாதுகாப்பை அதிகரித்து இருக்கிறோம் என்று அரசாங்கம் ஒருபக்கம் கூக்குரலிட்டுக் கொண்டு இருக்க மறுபக்கம் ஒரு நாளைக்கு 18 பெண்கள்  ஏதாவது ஒரு சித்ரவதையை அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் பல அறிவிக்கின்றது.


இஸ்லாமிய சமூகங்கள் ஒன்று கூடி பெண்களின் பாதுகாப்பிற்காக பாடு பட வேண்டும். இன்றைய கால கட்டதில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணம் பெண்களாகவே இருக்கின்றனர். அவர்கள் தங்களது நடை, உடை, பாவணை என அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு மேலை நாட்டு கலாச்சாரமும் வழிவகுக்கின்றது. பெண் சுதந்திரம் என்ற பெயரில் அவர்களை நிர்வாணப்படுத்தி மோகப்பொருளாக்கி சந்தைகளில் அழையவிடும் அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

பாலியல் கொடுமைகள், அநாச்சாரங்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பெண்கள் எவ்வாறு தங்களது அன்றாட வாழ்க்கையில் நடவடிக்கைகளை அமைத்து கொள்ள வேண்டும் என்று தூய இஸ்லாம் பல வழிமுறைகளை வழங்குகின்றது.

பெண்கள் தங்களது பார்வைகளை தாழ்த்தி கொள்ள வேண்டும், தங்களது வெட்கதலங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று திருக்குரான் கட்டளையிடுகின்றது. அந்நிய ஆண்களிடத்தில் நளினமாக நடந்து கொள்ளுவதை தடுக்கிறது. மற்றவர்களை தங்களின் பக்கம் கவர்ந்திழுக்கும் அநாகரீக ஆடைகளுக்கு முற்று புள்ளி வைக்கிறது. இதை பின் பற்றினாலே பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள். ஆனால் இன்றைய பெண்கள் வளைந்து கொடுப்பவர்களாக இருகிறார்கள். பெண் என்பவள் தன்னை பாதுகாப்பதில் கவனமாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். வளைந்து கொடுக்க கூடாது.

அதற்கு நிகழ்கால வரலாற்றில் உதாரணம் உண்டு. ஸ்பெயின் நாட்டு பெண் சுமையா ஒரு மிக சிறந்த படிப்பினை.

சுமையா இஸ்லாத்தை சார்ந்தவர் என்பதினால் ஃபர்தா அணிந்து கல்லூரிக்கு சென்றிருந்ததால் அதை அக்கல்லூரி ஏற்கவில்லை. ஃபர்தா அணியக் கூடாது என்று அப்பெண்ணை வற்புறுத்தியது. அந்நாட்டில் பெரும்பாலும் கிறிஸ்துவ கலாச்சாரம்  பின்பற்றபட்டு வருகிறது. சுமையா என்ற அப்பெண் தன் மானத்தை இழக்க தயாராக இல்லை. தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டி நீதி மன்றத்தை தேடிச்சென்றாள்.

வழக்கு தொடர்ந்து தான் ஒரு இஸ்லாமிய பெண் என்றும் தனக்கு என்று சில சட்டங்கள் இருக்கின்றது என்பதனை கூறி தனக்கு ஃபர்தா அணிய அனுமதி அளிக்கும் படி கேட்டுக் கொண்டாள். அவளுக்கு அந்நீதி மன்றம் 1995-ஆம் ஆண்டு சாதகமான தீர்ப்பை வழங்கியது. அப்பெண்ணின் வெற்றி இன்றும் போற்ற கூடியது அல்லவா? இக்கால பெண்கள் இதை சற்று உற்று உணர வேண்டும்.

இதே போன்று இஸ்லாமிய வரலாற்றில் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டி பல பெண்கள் தங்களது வாழ்க்கையை போராட்டமாக்கி இருக்கிறார்கள். அதில் வெற்றியும் அடைந்து இருக்கிறார்கள்.

பெண்களின் தலைவியான பாத்திமா (ரலி) அவர்கள் தங்களை அந்நியர்களின் தீய பார்வைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதில் மிக கவனமாக நடந்து கொள்வார்கள். இரவிலும் கூட வெளியே செல்லும் போது தங்களை யாரும் அடையாளம் காண முடியாதவாறு கிழவி போன்று தோற்றத்தை கொண்டவர்களாக வெளியே சென்று வந்ததாக வரலாறு சொல்கிறது.

தான் மரணத் தருவாயில் இருக்கும் போது தன் கணவர் மகன்கள் அனைவரையும் அருகில் அழைத்து நசியத்து செய்தார்கள். தான் இறந்த பிறகு தன் கணவர் மட்டுமே தன்னை குளிப்பாட்ட வேண்டும் என்றும் தன் மேனியில் ஆடையுடனே குளிப்பாட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். யாரும் தன்னை பார்க்கக் கூடாது என்று கேட்டு கொண்டார்கள். அதே போன்று தான் இறந்த பிறகு ஈச்சம் பாயில் துணி வைத்து மூடி தன் உடல் அங்க அடையாளம் தெரியாத படி மூடி இருக்க வேண்டும் தன்னை யாரும் அடையாளம் காணும் முன் இரவிலேயே அடக்கம் செய்துவிடும் படியும் கேட்டுக் கொண்டார்கள்.

அன்று முதல் தான் சந்தூக் (ஜனாசா பெட்டி) நடமுறைக்கு கொண்டு வரப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இது போன்று இன்றைய பெண்கள் நடந்து கொண்டால் நிச்சயம் பெண்களுக்கு எந்த வித ஆபத்தும் நேராது. அன்னை பாத்திமா (ரலி) அவர்களின் வாழ்க்கை முறையை இக்கால பெண்களாகிய நாம் அறிந்து அதன் படி செயல் பட வேண்டும்.

நமது ஊர்களில் ஒரு காலத்திற்கு முன்பு பெண்கள்  வெளியே வர வெட்கப்பட்டப்பட்ட காலம் இருந்தது. தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டி மஹ்ரிப் தொழுகைக்குப் பின்னரே வெளியே வருவார்கள். ஆனால் இன்றோ காலையிலும் மாலையிலும் வயது வந்த பெண்களும், வயது முதிர்ந்த பெண்களும் அழைந்து திரிகிறார்கள். இஸ்லாம் பெண்களை படிக்கவோ, வேலை பார்க்கவோ வேண்டாம் என்று தடை செய்யவில்லை. அதற்குறிய ஒழுங்கு முறையை பின்பற்றி  தங்களை பாதுகாத்து கொள்ள  வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

பெண்கள் தங்களை அன்னிய ஆண்களின் தவறான பார்வையில் பட கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஆனால் இன்று சில பெண்கள் தங்களது வீட்டு வாசல்களிலும், தெருவாசல்களிலும் அமர்ந்து கதை பேசி கொண்டிருப்பதை காண முடிகின்றது. அப்பொழுது இஸ்லாம் கூறும் முக்காடு (தலையை மறைத்தல்) போட கூட மறந்து இருக்கின்றனர். எவரேனும் அந்நிய ஆண்களையோ அல்லது தாடி வைத்து தொப்பி போட்டிருப்பவரையோ கண்டால் மட்டும் தலையில் தாவனியை போட்டு தலையை மறைக்கிறார்கள். அவ்வாறு பெண்கள் இருப்பதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

ஒருமுறை நபி (ஸல்) அவர்களது வீட்டிற்கு ஒரு சஹாபி வந்திருந்தார். உடனே நபியவர்கள் தங்கள் மனைவியை உள்ளே செல்லுமாறு பணித்தார்கள். அதற்கு நபியவர்களின் மனைவி வந்திருப்பவர் உம்மி மக்தூம் என்னும் இரு கண்களும் தெரியாதவர் தானே? நான் ஏன் உள்ளே செல்ல வெண்டும் என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் உங்களுக்கு பார்வை இருக்கிறதல்லவா? என்று கூறினார்கள். முஃமின்களின் தாயாகிய நபி அவர்களின் மனைவிக்கே இந்த கட்டளை என்றால் நீங்கள் உங்களது நிலையை சிந்தித்து கொள்ளுங்கள்.

எனவே பெண்கள் தங்களது பார்வையை தாழ்த்தி கொள்ளும் படி இஸ்லாம் நமக்கு கட்டளை இட்டு இருக்கிறது. இவ்வழிமுறை பெண்களை ஆபத்திலிருந்து பாதுக்காகும் கவசமாகும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

பெண் என்பவள் தங்கம் போன்றவள். தங்கத்தை நாம் எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்கிறோமோ அதே போன்று பெண்ணும் பாதுக்காக்க பட வேண்டியவள்.

விபச்சாரத்தின் அருகில் கூட சென்று விட வெண்டாம் என்று அல்லாஹ் நமக்கு கூறுகின்றான். பெண்கள் பாதுகாக்க பட வேண்டியது பற்றி இஸ்லாமிய மற்றும் அனைத்து சமூகங்களும் சேர்ந்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தனது உரையில் இமாம் குறிப்பிட்டார்கள்.

ஒரு பெண் தனது வீட்டிலிருந்து வெளியில் செல்லும் போது பேண வேண்டிய ஒழுங்கு முறைகளை பின்பற்றினாள் நிச்சயம் அவள் பாதுகாப்புக்குறியவள்.

சூரா அந்நூர் என்ற அத்தியாயத்தில் பெண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் நமக்கு சொல்லி காட்டுகிறான்.

"மேலும் (நபியே) முஃமினான (நம்பிக்கைகொண்ட) பெண்களிடம் கூறும்; அவர்கள் தங்களுடைய பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்; தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக்கொள்ளட்டும்; தங்களது அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்;..... (சூரா அந்நூர்:31)

"நபியே! உங்களது மனைவிகள், உங்களது புதல்விகள் மற்றும் முஃமின்களின் மனைவியர் ஆகியோரிடம் கூறுவீராக! அவர்கள் தங்கள் முந்தானைகளை தம்மீது போட்டுக் கொள்ளட்டும். இது அவர்களை அறியப்படுத்துவதற்கும் அவர்கள் தொல்லைகளுக்கு உள்ளாகாமல் இருப்பதற்கும் மிகவும் ஏற்ற முறையாகும்." (அஹ்ஸாப் :59)

1.பெண்கள் தங்களது பார்வைகளை தாழ்த்தி கொள்ள வெண்டும்.

2.அலங்காரம் யாருக்கு தன்னை அழகாக காட்ட வேண்டுமோ அவருக்கு (கணவருக்கு) மட்டும் காட்ட வேண்டும். ஆனால் இன்று பெண்கள் தங்கள் கணவருக்கு அலங்காரம் செய்கிறார்களோ இல்லையோ திருமணம் போன்ற விஷேசங்களில் வீடியோ காட்சிகளில் தாங்கள் தெரிய வேண்டும் என்பதற்காக தங்களை அலங்கரித்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதை அவசியம் தவிர்க்க வேண்டும். இது போன்ற விஷயங்கள் பெண்கள் கவனமாக இருந்தாலே அவர்கள் பாதுகாக்கபடுவார்கள்.

3.நறுமணம் பூசி கொண்டு பிறர் நம்மை பார்க்கும் படி வெளியில் செல்ல கூடாது. அது அடுத்தவரிடம் தங்களது அழகை காட்டுவதற்காக அமையுமானால் விபச்சாரத்திற்கு ஒப்பானது. அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும். .

4.ஒரு பெண் வெளியில் செல்லும் போது ஃபர்தா (உடலை முழுவதும் மறைக்கும் ஆடை) அணிந்து தன் தலை மற்றும் மார்பகங்களை மறைத்து செல்ல வெண்டும்.

இவ்வாறு பெண்களின் பாதுகாப்பு, பழக்கவழக்கங்கள் இஸ்லாத்தின் பார்வையின் படி அமைத்து கொண்டால் உறுதியாக பாலியல் வன்முறைகள் குறைந்து, அன்பு நிலை பெறும் பாதுகாப்பான வாழ்க்கை சாத்தியமாகும் என்று தூஆ செய்தவராக தனது உரையை நிறைவு செய்தார்கள்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டி தந்த வழி முறைகளை பின் பற்றி பெண்களாகிய நாம் வாழ்ந்தால் நிச்சயம் நாம் பாதுகாக்கப்படுவொம். அல்லாஹ் பெண்களாகிய நம்மை ஈருலகிலும் பதுகாப்பை தந்து கன்னியப்படுத்தி வைப்பானஹா! ஆமீன்...

சகோதரி அனிஷா பைசல் thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக