ராமநாதபுரம், ஜன. 8-
தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல், மழை தூறல் போடத் தொடங்கியது. காலைப்பொழுதில் வானம் மேக மூட்டமாகவே காணப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தூறல் மழையின் அச்சாரமாக நேற்று இரவு விடிய, விடிய மழை பெய்தது. ராமநாதபுரம், பாம்பன், மண்டபம், பரமக்குடி, ராமேசுவரம் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
ராமேசுவரத்தில் இன்று அதிகாலை 2 மணி வரை மழை நீடித்தது. இந்த மழையின் காரணமாக கடல் சீற்றமாக காணப்பட்டது. இன்று காலையும் தூறல் மழை நீடித்ததால், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், வேலை செல்வோரும் அவதிக்கு ஆளானார்கள். இருப்பினும் திடீர் மழையால் ராமநாதபுரம் மாவட்டத்தில் குளிர்ந்த நிலை காணப்பட்டது.

.maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக