சென்னை: வன்முறை வெடிக்கலாம் என்ற உளவுத்துறை
எச்சரிக்கையால்தான் விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக முதலமைச்சர்
ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.
விஸ்வரூபம் பிரச்னை தொடர்பாக செய்தியாளர்கள் கூட்டத்தில் விளக்கம் அளித்து
பேசிய ஜெயலலிதா, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
முறையாக நிலைமையை புரிந்துகொள்ளாமல் கடந்த சில நாட்களாக விஸ்வரூபம் தொடர்பாக
பல்வேறு புகார்கள், குற்றச்சாட்டுக்கள், விவாதங்கள், நடந்துகொண்டே இருக்கிறது.
அதனால் இதுபற்றி விளக்க விரும்புகிறேன்
படம் தடை செய்யப்படக்கூடாது,
திரையரங்குக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோருகிறார்கள். உண்மையில் சட்டம்
ஒழுங்கை நிலைநாட்டுவது பற்றி புரிந்துகொள்வதில்லை.. ஒரு முதலமைச்சராக மாநிலத்தின்
சட்டம் ஒழுங்கை காப்பாற்றி மக்கள் மத்தியில் அமைதி நிலைநாட்டுவது, தினசரி
வாழ்க்கையை கடைபிடிக்க நடவடிக்கை எடுப்பது முக்கிய கடமை.
எப்படி சட்டம்
ஒழுங்கு நிலைநாட்டப்படுகிறது? காவல் துறையைக் கொண்டு இதை செய்கிறோம்.
24 முஸ்லிம் அமைப்புகள் மற்றும் இதுதவிர சில அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை மனு
அளித்துள்ளனர். மாநில உள்துறை அமைச்சரை சந்தித்து படத்தை தடை செய்ய வேண்டும் என்று
கேட்டுள்ளனர். பல்வேறு பேராட்டங்களை அறிவித்துள்ளன இந்த அமைப்புகள்.
இந்த படம் 524 திரையரங்கங்களில் வெளியிடுவதாக இருந்தது. போராட்டத்தை
பொருட்படுத்தாமல், ஒருவேளை இந்த படத்தை நாங்கள் அனுமதித்தோம் என்றால், இத்தனை
திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிப்பது சாத்தியமா? 1 லட்சத்து 30 ஆயிரத்து 780
போலீசார் உள்ளனர். 21 ஆயிரம் காலியிடங்கள் உள்ளன. 91,807 போலீசார்தான் உள்ளனர்.
இதுதவிர பல்வேறு சிறப்புப் பிரிவுகள் உள்ளன.
இந்த சிறப்பு பிரிவுகளைக் கழித்தால் 87, 226 போலீசார்தான் உள்ளனர். 7 கோடி 8
லட்சம் பேருக்கு இவ்வளவு போலீசார் உள்ளனர்- சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட அனைத்து
பணிகளுக்கும். திரையரங்க பாதுகாப்புக்கு 31440 பேர் பாதுகாப்புக்கு
தேவை
படம் வெளியானால் பாதுகாப்புக்கு மட்டும் 50, 440 போலீசார்
தேவைப்படுவார்கள். எப்படி ஒரு மாநில அரசால் இப்படி பாதுகாப்பு அளிக்க முடியும்.
எங்களிடம் போதுமான காவல்துறை இல்லாத நிலையில் எப்படி பாதுகாப்பு அளிக்க முடியும்?
சட்டம் ஒழுங்கை காப்பது என்றால் என்ன?
விஸ்வரூபம் படம் தமிழகத்தில் 524 திரையரங்குகளில் திரையிடப்பட இருந்தது.
இப்படத்திற்கு 24 இஸ்லாமிய கூட்டமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில்,
படம் வெளியிடப்பட்டால், வன்முறை வெடிக்கலாம் என்றும், சட்டம் ஒழுங்கு
பாதிக்கப்படலாம் என உளவுத் துறை தகவல் அனுப்பி இருந்தது.
கமல்ஹாசன் மீது தனிப்பட்ட விரோதம் இல்லை.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை அரசுக்கு உண்டு. இதில் அரசியல் பழிவாங்கும்
எண்ணம் எதுவும் இல்லை. கமல்ஹாசன் மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவுமில்லை.
இப்படம வெளியாகாமல் போனால் தனது வீடு, சொத்தை இழக்க வேண்டியது வரும் என்று
கமலஹாசன் கூறியுள்ளார்.கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பிறகு என்னைப் பார்க்க கமல்
நேரம் கேட்டிருந்தார். வழக்கு தொடர்ந்தபிறகு பார்ப்பதில் என்ன இருக்கிறது...
கமலஹாசனுக்கு 58 வயதாகிறது.. அவர் சில கணக்குகளை போட்டு, 100 கோடி ரூபாய்
செலவில் தனது ரிஸ்க்கில் படம் எடுத்து, இழப்பை சந்தித்தால் அதற்கு அரசாங்கம் எப்படி
பொறுப்பேற்க முடியும்?
மேலும் விஸ்வரூபம் படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜெயா தொலைக்காட்சிக்கு
விற்காததாலும்,.ப.சிதம்பரத்தை குறிப்பிட்டு வேட்டி கட்டிய தமிழன் பிரதமர் ஆக
வேண்டும் என்றும் கமலஹான கூறியதாலும்தான் அப்படத்திற்கு நான் தடை விதித்ததாக
பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களிலும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியும் இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி மற்றும் அச்செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் மீது வழக்கு
தொடரப்படும்.
ஜெயா தொலைக்காட்சிக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அது அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக செயலபடுகிறது அவ்வளவுதான்.
அதேப்போன்று அரசியலில் நான் பல ஆண்டு காலம் உள்ளேன். வேட்டி கட்டிய ஒருவர்
பிரதமராக வரவேண்டும் என்று கமலஹாசன் சொன்னது அவரது கருத்து சுதந்திரம். கமலஹாசன்
பிரதமரை தேர்வு செய்யமுடியாது அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்பதை மக்கள்தான்
தீர்மானிப்பார்களே தவிர, கமலஹாசன் சொல்லி அல்ல என்பது எனக்கு தெரியும்.
திமுக தலைவர் கருணாநிதி என்ன பிரச்னை எழுந்தாலும் அதில் அரசியல் செய்யத்தான்
பார்ப்பார். விஸ்வரூபம் பிரச்னையில் கருணாநிதியின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது.
‘விக்ரம்’ பட விவகாரத்தில் எம்.ஜி.ஆருக்கும் நான் கடிதம் ஏதும் எழுதவில்லை.
எம்.ஜி.ஆரை தினமும் சந்தித்த நான் எதற்கு கடிதம் கொடுக்க வேண்டும். எனவே, கருணாநிதி
மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
சுமூக தீர்வு:
சில பகுதிகளை அகற்றுவதாக கமல் உறுதி அளித்துள்ளதாக கூறிய்ளள்ளார் அதை முஸ்லிம்
அமைப்புகள் ஏற்றுக்கௌர்வதாக தெரிவித்துள்ளர். சுமூக தீர்வு ஏற்பட முஸ்லிம்
தலைவர்கள், கமல் அமர்ந்து முடிவெடுத்தால் தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கும்."
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக தமிழக
முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் காவல்துறை டிஜிபி ராமானுஜம்,அரசு
வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இன்று காலை அவசர ஆலோசனை
நடத்தினார்
.news.vikatan thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக