puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 7 ஜனவரி, 2013

பொங்கல் பரிசு பை வழங்குவதற்காக ரேஷன் கார்டுகளில்

 
தமிழ்நாட்டில் 1.84 கோடி அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகவும் பொதுவிநியோகத் திட்டத்தில் வழங்கப்பட வேண்டிய அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் போதுமான அளவு இருப்பு வைத்து வழங்கப்படுவதை உறுதி செய்திடும் வகையில் இதற்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பொய்த்ததன் காரணமாகவும் இடர்பாடு பங்கீட்டு முறையின்படி தமிழகத்திற்குத் தர வேண்டிய காவேரி நீரினை கர்நாடகம் திறந்து விட மறுத்ததாலும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது தாமதம் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் தண்ணீர் திறந்து விடுவதும் நிறுத்தப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயப் பெருமக்களும் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும் வகையில் பொது விநியோக திட்டத்தின் கீழ் நியாய விலை கடைகளில் அரிசி பெறும் 1 கோடியே 84 இலட்சம் அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 ரூபாயில் ஒரு கிலோ பச்சரிசியும் 40 ரூபாயில் ஒரு கிலோ சர்க்கரையும் இத்துடன் ரூபாய்.100- ரொக்கத் தொகையும் சேர்த்து மொத்தம் 160 ரூபாய் மதிப்பிலான சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு ஒன்றினை அளித்து தமிழக முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.இந்த அரசாணையினைத் தொடர்ந்து 31.12.2012 தேதியில் புழக்கத்தில் உள்ள அனைத்து அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் ஒதுக்கீடு உத்தரவினை உணவுப்பொருள் வழங்கல் துறை பிறப்பித்துள்ளது. மாவட்ட அளவில் மாவட்ட வழங்கல் அலுவலர்கள்ஃ மாநகர துணை ஆணையாளர் ஆகியோர் உபஒதுக்கீடு உத்தரவு பிறப்பித்து அதன்படி பொங்கல் தொகுப்பு தமிழ்நாட்டிலுள்ள 33இ490 கூட்டுறவு மற்றும் அமுதம் நியாயவிலை அங்காடிகள் மூலம் விநியோகம் செய்யப்படும்.பொங்கல் தொகுப்பு வழங்குவதை முன்னிட்டு குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டும்பணி 8.1.2013 முதல் 17.1.2013 வரை ஒத்திவைக்கப்படுகிறது. இப்பணி 18.1.2013 முதல் மீண்டும் தொடர்ந்து நியாயவிலைக் கடைகளில் மேற்கொள்ளப்படும். இதுவரை குடும்ப அட்டையை புதுப்பித்துக் கொள்ளாத அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு பைகள் விடுதல் இன்றி வழங்கப்படும். இப்பணியை பொங்கல் பண்டிகைக்கு முன் முடிக்கும் பொருட்டு 13.1.2013 ஞாயிறு அனைத்து நியாயவிலை அங்காடிகளுக்கும் வேலை நாளாகவும் இதற்கு பதிலாக 16.1.2013 அன்று ஈடு செய்யும் விடுமுறையாகவும் அறிவிக்கப்படுகிறது.ஏழை எளிய மக்கள் நலன் கருதி முதல்வர் இச்சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளதால் உணவு கூட்டுறவு மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு இத்திட்டத்தினை சிறப்பாக நிறைவேற்றிட தங்கள் ஒத்துழைப்பினை நல்கிடுமாறு உணவுத்துறை அமைச்சர் அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.இந்த சிறப்பு பொங்கல் பரிசு விநியோகம் நடைபெறும் காலத்தில் வழக்கம் போல அனைத்து அத்தியாவசியப் பொருள்களான அரிசிஇ பருப்பு பாமாயில் முதலியன தொய்வின்றி வழங்கப்படும். இத்திட்டம் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக போதிய அளவு அரிசிஇ சர்க்கரை இருப்பு வைக்கப்பட்டுள்ளது.இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய பிரச்சனைகள் உள்ள நியாயவிலைக் கடைகளை கண்டறிந்து அவைகளில் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கும் பொருட்டு தக்க பந்தோபஸ்து ஏற்பாடுகள் செய்ய சம்பந்தப்பட்ட மாவட்டம் வட்டம் மண்டல அலுவலர்கள் காவல் துறை அலுவலர்களை அணுக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசு விநியோகம் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் ஒவ்வொரு மண்டலங்களுக்கும் 

tamilantelevision thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக