
January 6,
2013 04:37 pm
சில
வருட இடைவெளிக்கு பிறகு,
மீண்டும் தனது பிறந்தநாள் விழாவிலும், அதற்கு
அடுத்து மத்திய அமைச்சர் சிதம்பரம் பிறந்தநாள் விழாவிலும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளார்.
ரஜினியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, நடந்த
விழாவில், ரஜினி
அரசியலுக்கு வர வேண்டும் என, சக
நடிகர்கள் அவரை உசுப்பேற்றி விட்டனர்.
ஆனால், விழாவில் பேசிய ரஜினியோ, "அரசியலுக்கு வருவேன் என, பொய்யான
வாக்குறுதிகளை தர மாட்டேன்´என, குறிப்பிட்டார்.
அரசிலுக்கு வர வேண்டும் என எதிர்பார்த்து, இந்த
பேச்சால், ஏமாந்து
போன ரசிகர்களுக்கு,
அடுத்த நிகழ்ச்சியில் உற்சாகத்தை ஏற்படுத்தினார் ரஜினி.
தி.மு.க., தலைவர்
கருணாநிதி கலந்து கொண்ட,
மத்திய அமைச்சர் சிதம்பரம் பற்றிய நூல் வெளியீட்டு
விழாவில், ரஜினி
அரசியலுக்கு வர வேண்டும் என்று யாரும் அழைப்பு விடுக்காத நிலையில், தானாகவே
அரசியல், பேச
ஆரம்பித்தார்.
அவர்
பேசும்போது,
"ஒரு ரசிகனை போல், எப்ப
அரசியலுக்கு வருவீங்கன்னு, அமைச்சர் சிதம்பரமே கேட்கிறார். நான் அரசியலுக்கு
வந்தால், ‘என்
வழி தனி வழி´
என்று ரசிகர்களை சூடேற்றினார் ரஜினி.
ரஜினிக்கு பின் பேசிய கருணாநிதி, "ரஜினியை
நேரடியாக அரசியலுக்கு இழுத்தால் தான் தவறு. அவரை மறைமுகமாக இழுத்தால் தவறில்லை.
அவரை மறைமுகமாக தான்,
அரசியலுக்கு இழுக்கிறோம்´ என
குறிப்பிட்டார்.
இதற்கு, கூட்டத்தில் பெரும் கைதட்டல் கிடைத்தது. மறைமுகமாக ரஜினியை
அரசியலுக்கு இழுக்கிறோம் என, கருணாநிதி பேசியது, உள்நோக்கம் கொண்டதாக இருக்கும் என, அரசியல்
வட்டாரங்களில் கூறப்படுகிறது.
லோக்சபா
தேர்தலின்போது,
காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணிக்கு, நேரடியாக பிரசாரம் எல்லாம் செய்ய வேண்டாம். 1996ல்
வெளியிட்டது போல்,
ஜெயலலிதா அரசுக்கு எதிராக, கருத்தை
மட்டும் வெளியிட்டால் போதும் என்பது போல், கருணாநிதியின் பேச்சு உள்ளது என்கின்றனர் அரசியல்
பார்வையாளர்கள்.
"ஜெயலலிதாவுக்கு எதிராக, 1996
சட்டசபை தேர்தலின் போது,
கருத்து தெரிவிக்குமாறு, தேசிய
தலைவர்கள் சிலர் என்னை கேட்டுக் கொண்டனர். அதனால், கருத்து
தெரிவித்தேன். அதன் பிறகு, அரசியல்
பற்றிய கருத்துக்களை,
நான் தெரிவிக்கவில்லை´ என, ரஜினி
சமீபத்தில் தான் தெரிவித்தார்.
நிர்பந்தங்களின் அடிப்படையில், கருத்து
தெரிவித்தேன் என்பதை உறுதி செய்யும் ரஜினி, மீண்டுமொரு நிர்பந்தம் ஏற்பட்டால், தன்
நிலையை மாற்றிக் கொள்வார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
ரஜினி
இரசிகர் மன்ற மாநில நிர்வாகிகள் கூறியதாவது...
மீண்டும் தலைவரை பயன்படுத்தி, அரசியல்
ஆதாயம் அடைய ஒரு திட்டம் போடப்படுகிறது. ஆனால், அவர்
அதை புரிந்து கொள்வார். ஏற்கனவே, தி.மு.க. - த.மா.கா. கூட்டணிக்கு ஆதரவாக பாடுபட்ட எங்களுக்கு, பின்னாளில் என்ன மரியாதை கிடைத்தது என்று தலைவருக்கு நன்றாக
தெரியும்.
அவர்
நேரடியாக அரசியலுக்கு வந்தால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், மறைமுகமாக வாருங்கள் என்று அழைப்பு விடுக்கின்றனர். லோக்சபா
தேர்தலில், இவர்கள்
எதிர்பார்க்கும்,"வாய்ஸ்´ கிடைக்காது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்
thamilan. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக