puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

சென்னை இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் ஓட்டலில் மர்ம சாவு


சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் அன்பழகன். தபால்துறை ஊழியர். இவரது மகன் விக்னேஸ்வரன் (20). வேளச்சேரியில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ. (சிவில்) மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி புராஜக்ட் பணிக்காக 127 மாணவர்கள் சேலம் மாவட்டம் ஏற்காடுக்கு நேற்று முன்தினம் வந்தனர். அவர்கள் ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் இரவுஇ விக்னேஸ்வரன் உள்பட உடன் வந்த மாணவர்கள் சிலர் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இரவு 8 மணியளவில் விக்னேஸ்வரன் அறையில் உள்ள கழிப்பறைக்கு சென்றார். அவர் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் கீழே விழும் சத்தம் கேட்டது. அந்த அறையில் தங்கியிருந்த மற்ற மாணவர்கள் உடனடியாக கழிப்பறைக்குள் சென்று பார்த்தபோதுஇ விக்னேஸ்வரன் மூச்சு பேச்சின்றி விழுந்து கிடந்தார். அவர் மீது தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றனர். அப்போதும் அவர் எழுந்திருக்கவில்லை. அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இதனால் பதற்றம் அடைந்த அவர்கள் ஏற்காடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவர் மர்மச்சாவு குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

tamilantelevision. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக