puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 21 ஜனவரி, 2013

கடல் திரைப்படமும், முத்த சர்ச்சைகளும்...


கடல் திரைப்படமும், முத்த சர்ச்சைகளும்...

இப்போதெல்லாம் ஒரு திரைப்படம், வெளிவருவதற்கு முன்பே எதன் பொருட்டாவது சர்ச்சையை ஏற்படுத்தி விளம்பரம் தேடி கொள்கிறது. அந்த வகையில் விஸ்வரூபம் டி.டி.ஹெச் மற்றும் முஸ்லீம் அமைப்பினர்களின் எதிர்ப்பால் விளம்பரம் பெற்றது என்றால் மணிரத்னத்தின் கடல் திரைப்படம், அப்படத்தில் உள்ள "முத்தக்காட்சிகளால்" சர்ச்சைக்கு ஆளாகி இருக்கிறது. "முத்தக்காட்சி தமிழ் திரைப்படங்களுக்கு ஒன்று புதிதில்லையே" என்று கமல் போன்ற அனுபவஸ்தர்கள் சொல்லக்கூடும்.

ஆனால் இங்கே முத்தம் சர்ச்சையானது - பதினான்கே வயதான நாயகி துளசியை (சிறுமியை) வைத்து முத்தக்காட்சி எடுத்ததே சர்ச்சை. பதினான்கு வயதுக்குட்பட்டவர்களை குழந்தை தொழிலாளர்களாய் பாவித்து, குழந்தை தொழிலாளர்களை அரசு ஒழிக்க போராடுகையில், மெத்தப்படித்த மணிரத்னத்திடம் இருந்து இப்படி ஒரு படைப்பா? இது குறித்து முன்பே வினவு ஒரு கட்டுரை எழுதி இருந்தது வரவேற்க்கத்தக்கது.

இந்த முத்தக்காட்சியை கண்டித்து பத்திரிகையாளர் ஞானி, ஒரு நல்ல கட்டுரை எழுதி உள்ளார். "ஒரு முத்தமும் பல கேள்விகளும்" என்கிற தலைப்பில். கட்டுரையிலிருந்து ஒரு பகுதி - சுருக்கமாக. "எதிர் பாலினத்துடன் ஆரோக்கியமாக உறவாடி ஒருவரையொருவர் புரிந்துகொள்ள உதவும் சூழல் குடும்பத்திலும் இல்லை, கல்விக் கூடத்திலும் இல்லை. எங்கும் இல்லை. இந்த நிலையில் இருக்கும் விடலைப் பருவத்தினரில் இன்னும் அதிகம் பேர் இன்னும் அதிக பாலியல் குற்றங்களை நோக்கித் தள்ளப்படாமல் இருப்பதே ஆச்சரியமானதுதான்.

இந்தப் பின்னணியில் தான் 15 வயது சிறுமியை (வினவு தளம் பதினான்கு வயது என்கிறது)  இதழ் முத்தக் காட்சியில் மணிரத்னம் பயன்படுத்துவதன் தவறை, ஆபத்தைப் பார்க்க வேண்டும். பதினைந்து வயதில் ஒருவர் முத்தமிடக் கூடாதா என்ற கருத்தைப் பார்ப்போம். எந்த வயதிலும் முத்தமிடலாம், யாரும் முத்தமிடலாம். ஆனால் அந்த ஒவ்வொரு முத்தமும் வெவ்வேறானவை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். எது வெறும் உடல் கவர்ச்சி, எது தற்காலிக ஆசை, எது காதல், எது பரஸ்பர அன்பு, எது பரஸ்பர மதிப்பு என்பதையெல்லாம் தன் உடலை இன்னொரு உடலுடன் பகிரும்போதெல்லாம் தெரிந்தே பகிரக் கற்காமல் பகிர்ந்தால் மனநல பாதிப்புதான் ஏற்படும்.

என்னுடன் மிகுந்த வாஞ்சையுடன் பழகிய பல இளைஞர்களின் திருமணங்களுக்குச் செல்லும்போது நான் மணமகனுக்கும் மணமகளுக்கும் நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்துகிறேன். எல்லா முத்தமும் ஒன்றென்று வாதிட்டு, நான் அவர்களை இதழில் முத்தமிட்டு வாழ்த்த முடியாது. சினிமாவில் 15 வயது சிறுமி இதழ் முத்தத்தில் ஈடுபடுவதைப் பார்க்கும் 15 வயது சிறுவர்கள் மனதில் அது எப்படிப்பட்ட கிளர்ச்சிகளை ஏற்படுத்தும் என்பது பற்றி படைப்பாளிகளுக்குப் பொறுப்புணர்ச்சி வேண்டும்.

நம் சமூகத்தில் திரைப்படங்கள், யு, ஏ, யூஏ என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டாலும் தணிக்கை முறை சீராகவோ நேர்மையாகவோ இல்லை. எல்லா படங்களும் தொலைக்காட்சியில் யாரும் பார்க்கும்விதம் கிடைக்கும் சூழலே இருக்கிறது. மேலை நாடுகளில் இருக்கும் வரையறுக்கப்பட்ட சூழல் இதில் இங்கே நம்மிடம் இல்லை." என்றவர் முத்தாய்ப்பாக இப்படி முடிக்கிறார்.

"காதல் என்றால் என்ன என்று நம் சிறுவர்களுக்கு சொல்லித் தருவதில் பெரும் பங்கு வகிப்பது நம் சினிமாதான். அது காட்டும் காதல் ரவுடித்தனத்தையும் விடலைத்தனத்தையும் பெண் சீண்டலையும் ஊக்குவிப்பதாகவே இருக்கிறது. இது மாறியாக வேண்டும். மாற வேண்டுமானால் நாம் அனைத்தையும் விமர்சித்து விவாதித்தாக வேண்டும். அதை மணிரத்னத்தின் விடலை முத்தத்திலிருந்தே தொடங்கலாம்." என்கிறார். நிச்சயம், ஏதாவது ஒரு இடத்திலிருந்து துவங்கி தானே ஆக வேண்டும். துவங்கலாம்.

எப்போதுமில்லாத அளவுக்கு பாலியல் வன்கொடுமைக்கு - காட்சி ஊடகங்கள் நிறைய காரணமாக இருக்கிறபோது - அத்துறையில் உள்ள ஒவ்வொருவரும், தம்மை சுயபரிசோதனை செய்வது மிக அவசியம். "எல்லா சமூக சீரழிவுகளுக்கும் திரைப்படங்கள் தான் காரணம் என்று சொல்கிறிர்களா" என்று திரைத்துறையினர் கோபப்படலாம். சீரழிவுக்கு சினிமாவும் ஒரு மிக பெரிய காரணம் என்பதை திரைத்துறையினரும் மறுக்க மாட்டார்களே. நல்லது எது, கெட்டது எது என்று உணரக்கூடிய பக்குவமில்லாத வளர்பருவத்தினருக்கு கெட்டதையே புகட்டிக் கொண்டிருக்கிறது திரைப்படங்கள். இதயத்தை திருடாதே படத்தில் "ஓடிப் போயிடலாமா" என்று கேட்பதிலிருந்து, அலைபாயுதேவில் "திருட்டுக்கல்யாணம் பண்ணிக்கொள்வது வரை" மணிரத்னம் - நஞ்சை தான் விதைத்து கொண்டிருக்கிறார்.பெண்கள் ​சிகரெட் பிடிக்கவும், வீட்டுக்கு தெரியாமல் மணம் முடிக்கவும் கற்று தருபவர்களே - மணிரத்னத்தின் புரட்சி நாயகிகள்.

படம் பார்ப்பவன் "அது ஒரு கதை" என்று நினைக்க போவதில்லை. "நாமும் அத்தகைய காரியத்தை செய்தால் என்ன" என்று இறங்குகிறான். காணாமல் போகும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்திருப்பது காவல்துறையினருக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது. இதன் ஆரம்பம் - திரைப்படங்கள் "பிஞ்சில் பழுக்க வைப்பது" தான்.​திரைப்படங்கள் கற்று தரும் பாடங்களால் ஓடி போகிறவர்களின் கதி? திரைத்துறை சார்ந்தவர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்வது நல்லது. கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் தம் இஷ்டத்திற்கு எதையும் எடுத்து விட முடியாது.

சாமானியரிடம் இருந்து சமூக நல ஆர்வலர் வரை இன்று விழிப்புணர்வு பெற்று கொண்டு இருக்கிறார்கள். ஷங்கரின் "பாய்ஸ்" படத்திற்கு மற்றும் எஸ்.ஜே.சூரியாவின் B.F என்கிற பட டைட்டிலுக்கு கிடைத்த எதிர்ப்பை, சுலபத்தில் மறக்க முடியாது. முத்தக்காட்சி வைப்பதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் பதினான்கு வயது சிறுமி முத்தக்காட்சியில் எனும்போது - உங்களுக்கு தரப்பட்டுள்ள கருத்து சுதந்திரம் அப்பட்டமாக மீறப்படுகிறது.

அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் வந்த காலக்கட்டம் வேறு. எதிர்ப்பில்லாமல் மக்கள் பார்க்கிற காலமில்லை. அன்றும் அந்த படத்திற்கு எதிர்ப்பில்லாமல் இல்லை. "வாடி என் கப்பக்கிழங்கே" என்று துவங்கி வயதுக்கு மீறின காதல் காட்சிகளை வைத்து விட்டு - கடைசி காட்சியில் பூணூலையும், சிலுவையும் அறுத்து கொண்டால் புதுமையான திரைப்படமாகிவிடாது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சொல்வதெல்லாம் உண்மை - பதிமூன்று வயது சிறுமி "காதல் என்று ஓடி போனதை காட்டும்போது - பெற்ற வயிறு எந்தளவு வேதனைப்படும். சுட்டி குட்டீஸ் நிகழ்ச்சியில் - ஐந்து வயது குழந்தையிடம் "லவ் லவ்வுன்னு சொல்றாங்களே. அப்படின்னா என்ன" என்று கேட்கிறார் அறிவிப்பாளர். மனிதனை திசை திருப்பும் அனைத்து விஷயங்களும் எல்லா திசையிலிருந்தும் வருகிறது. காப்பாற்றி கொள்ள போராடு தான் வேண்டி உள்ளது.

தெரியாமல் நேருகிற தவறுகளுக்கு மன்னிப்பு உண்டு. தெரிந்து நேருகிற தவறுகளுக்கு... உங்களுக்கே தெரியவில்லையோ "நீங்கள் செய்வது தவறு" என்று.

படங்கள்  - teenageclinic

oosssai.blogspot thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக