- Wednesday, 16 January 2013 10:24

டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டபோது நீதி கேட்டு டெல்லியில் மாபெரும் போராட்டம் நடந்தது.
அப்போது டெல்லி காவலர் டோமர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது கூறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு, மற்றும் காவல்துறைக்கு டெல்லி உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் 23 ஆம் திகதி நடந்த மாணவர் போராட்டத்தின் போது, காவலர் சுபாஷ் டோமர் மயங்கி விழுந்து, மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சைப் பலனின்றி 25 ஆம் திகதி உயிரிழந்தார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலர் டோமரைத் தாக்கியதால்தான் மயங்கி விழுந்தார் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஓடும்போது மாரடைப்பால் டோமர் மயங்கி விழுந்தார் என போராட்ட தரப்பு மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இதில் உண்மையைக் கண்டறிய சி பி ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டு வழக்கறிஞர் கவுரவ் குமார் பன்சால் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது,
போலீஸ்காரர் டோமர் மரணம் குறித்து ஒருவாரத்திகுள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி ஜி.பி.மிட்டல் மத்திய அரசுக்கும், டெல்லி காவல்துறைக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.மேலும் டோமர் மரணம் தொடர்பாக 8 பேர் கைதாகியுள்ளனர். இவர்கள் 8 பேரும் யார் யாருடன் பேசினார்கள் என்கிற விவரங்களை பதிவு செய்து வைத்து இருக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.
.4tamilmedia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக