Sunday, 06 January 2013 10:48 administrator
3/1/2012 அன்று இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு
சார்பில் விஸ்வரூபம் திரைப்படம் குறித்து சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு
நடத்தப்பட்டது. இதில் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் முஸ்லிம்களின் மத உணர்வுகளை
புண்படுத்தும் வகையில் இருக்கும் என்ற அச்சம் தெரிவிக்கப்பட்டது. இவரின் முந்தைய
திரைப்படங்களான உன்னைப்போல் ஒருவன், ஹேராம் உள்ளிட்ட திரைப்படங்களின் முஸ்லிம்களை
புண்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றிருந்து, அது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள
நிலையில் விஸ்வரூபம் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகளும் அதுபோன்ற சந்தேகத்தையும்
அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது... எனவே விஸ்வரூபம் திரைப்படத்தை இஸ்லாமிய
கூட்டமைப்பினருக்கு திரையிட்டு காட்டிய பிறகு வெளியிட வேண்டும் என்றும்,
கூட்டமைப்பினருக்கு காட்டாமல் திரைப்படம் வெளிவந்து அது முஸ்லிம்களின் மத உணர்வை
காயப்படுத்தினால் அதனால் ஏற்படும் போராட்டங்களுக்கும், அனைத்து பின் விளைவுகளும்
கமலஹாசனே பொறுப்பேற்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில்
தெரிவிக்கப்பட்டது.
இப்பதிரிக்கையாளர் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் மவ்லவி அப்துர்ரஹ்மான் மிஸ்பாஹி, தமுமுக பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது, Welfare Party of India தலைவர் எஸ்.என். சிக்கந்தர், PFI தலைவர் இஸ்மாயில், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் SM பாக்கர், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹனிபா உள்ளிட்ட இஸ்லாமிய கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Last Updated ( Sunday, 06 January 2013 10:54 ) இப்பதிரிக்கையாளர் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் மவ்லவி அப்துர்ரஹ்மான் மிஸ்பாஹி, தமுமுக பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது, Welfare Party of India தலைவர் எஸ்.என். சிக்கந்தர், PFI தலைவர் இஸ்மாயில், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் SM பாக்கர், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹனிபா உள்ளிட்ட இஸ்லாமிய கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக