puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 4 ஜனவரி, 2013

அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம் - தவறில்லை.


அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம் - தவறில்லை.

"ஊழல்வாதிகளை தண்டிக்க வேண்டும்" என்றால் "நீ யோக்கியனாக இருந்தால் - அடுத்தவனை குற்றம் சொல்" என்கிறார்கள். ஏற்று கொள்கிறோம். தனி மனித ஒழுக்கம் குறித்து பேசும் போது "உன் அசிங்கத்தை முதலில் கழுவு. பிறகு அடுத்தவன் அசிங்கத்தை பற்றி பேசலாம்" என்கிறார்கள். ஏற்று கொள்கிறோம். ஆனால் இப்போது பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகப்பட்ச தண்டனையாக மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பார்த்தும், "யோக்கியன்களாக இருப்பவர்கள் மட்டும் கல்லெறியுங்கள்" என்கிறார்கள்.

 முதல் இரண்டு உதாரணங்களில் சொன்னது போல - மூன்றாவது விஷயத்திலும், "யோக்கியனாக நாமில்லை. அதனால் நாம் குரல் கொடுக்க தகுதி பெற்றவர் இல்லை" என்று கண்டு கொள்ளாமல் போய் விட முடியுமா? இந்த விஷயத்தில் - எதை அடிப்படையாக கொண்டு யோக்கியன், அயோக்கியன் என்று இனம் பிரிப்பது. அரசியல்வாதிகளை பார்த்து சவால்விடும் பேச்சை அப்பாவி பொது மக்களை பார்த்தும் பேசுகிறார்கள்.

"டெல்லி குற்றவாளிகள் விஷயத்தில் கல்லெறியும் உரிமை எல்லோருக்கும் உண்டு… யோக்கியனான பிறகு அதை செய்யுங்கள்" என்று வைக்கப்படுகிற வாதத்தை எம்மால் ஏற்க இயலாது. "என் கண் முன்னே நிகழும் ஒரு சம்பவம் என்னை பாதிக்கிறது, அதன் தொடர்ச்சியாக ஒரு எதிர்ப்புணர்வு கிளம்புகிறது." இதற்கு நான் யோக்கியனாக இருக்க என்ன அவசியம் இருக்கிறது. என் வீட்டில் இப்படியொரு அசம்பாவிதம் நிகழ்கிறது. "நீ யோக்கியனில்லை, அதனால் ஒதுங்கி கொள் " என்பீர்களோ.

அதனால் "அயோக்கியனாக இருந்தாலும் கல்லெறியலாம். தப்பில்லை. அடுத்தவனை விடுங்கள். அவன் அயோக்கியன். நீங்கள் கல்லெறியலாமே. நீங்கள் யோக்கியன் தானே. அதிலும் சந்தேகமா?". வாதத்திற்காக போராட்ட குழுவிலிருந்த ஒரு நண்பர் சொன்னதை பகிருகிறோம். "யோக்கியனா... அயோக்கியனா என்கிற கேள்வி இங்கே எதற்கு வருகிறது. பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு மரண தண்டனை தேவை என்கிற போராட்டத்திற்கு களமிறங்கும் நாம் - ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இதே போன்றதொரு தவறை புரிந்தால், எனக்கும் நான் கோரும் மரண தண்டனையை தாருங்கள்.

 இங்கே "நானோ, என் உயிரோ எனக்கு முக்கியமல்ல. என்னிலும் எனக்கு முக்கியமானவர், என்னால் பாதிக்கப்பட்ட பெண்ணே. என்னால் சிதைக்கப்பட்ட அவளை போலவே நானும் சிதைக்கப்பட வேண்டும். நான் செய்த தவறுக்கு மரண தண்டனை தேவையே. மரண தண்டனை கொடுப்பதால் மட்டும் குற்றங்கள் குறையுமா என்கிற கேள்வி முட்டாள்தனமானது. நான் செய்த தவறுக்கு தண்டனை தாருங்கள். அதனால் குற்றம் குறைகிறது அல்லது குறையவில்லை என்று சொல்வது தேவையற்ற வாதம்" என்று ஆண்களே சொல்கிற அளவுக்கு பாலியல் வன்செயல்கள் ஆண்கள் மனதை பாதித்திருக்கிறது.

 டீக்கடையில் இருந்து இன்று மேலே வரை - இருப்பவன், இல்லாதவன், படித்தவன், பாமரன் என்கிற பாகுபாடின்றி விவாதிக்கப்பட்டு ஏக மனதாக அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது, "பாலியல் வன்கொடுமை புரிபவனுக்கு அதிகப்பட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்பது. நாடு முழுக்க ஒரே குரலாக ஒலிக்கும் இதற்கும் எதிர்ப்பு இருக்கத் தான் செய்கிறது. யார் எதிர்ப்பவர்கள் என்று பார்த்தால் "இந்த நாட்டில் நல்லது, கெட்டது என்று எது நடந்தாலும் - அதை எதிர்ப்பதையே தங்கள் தொழிலாக கொண்டவர்கள்".

அவர்கள் தான் "யோக்கியர்கள் கல்லெறியட்டும்" என்கிற முற்போக்குகள். "தூக்கு தண்டனை கொடுப்பதால் குற்றங்கள் குறைந்துவிடுமா" என்று விதண்டாவாதம் பேசுபவர்கள். இப்படி பேசுவதற்கு தமிழக அளவில் மனுஷ்யபுத்திரன், இந்திய அளவில் அருந்ததி ராய் போன்றவர்கள் ஏக போக உரிமை பெற்றிருக்கிறார்கள். அருந்ததி ராய் அம்மையார் - மக்களின் ஆவேச ஆர்ப்பாட்டத்தை பார்த்து சொன்ன கருத்தை பார்ப்போம். "இந்தப் போராட்டம் நடுத்தர வர்க்கத்தின் போராட்டம் என்றும், இது அடித்தட்டு மக்களுக்கு பயனளிக்காது என்றும், இது போன்ற வன்முறைகள் வட கிழக்கு மாநிலங்களில் ராணுவத்தாலும் காவல் துறையினராலும் நிகழ்த்தப்படுகிறது. இந்த டெல்லி சம்பவத்திற்கு மட்டும் எதற்கு இந்தளவு கூப்பாடு ."
 கேலியாக, கேவலமாக இல்லை அவர் கருத்து. ஏழை பெண் கற்பழிக்கப்பட்டால் அவளுக்கு நீதி கிடைக்காமல் போகுமோ? அப்படி வாதாடுவது அவர்களின் அற்பப்புத்தியை காட்டுகிறது. சிலர் தப்பிக்கலாம். மறுக்கவில்லை. ஆனால் தண்டிக்கப்படுபவர்களை மறைத்து - அதை அவர்கள் கணக்கில் சேர்க்க மாட்டார்கள். ஏன் எனில் குறை சொல்வதையே தொழிலாக கொண்டவர்கள். இதோ நேற்றைய செய்தி. "ஏழை பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். குற்றவாளிக்கு திருவனந்தபுரம் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. ஏழை பெண் என்பதால் சட்டம் யாரையும் ஏமாற்றிவிடவில்லை.

இதோ அசாம் மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான விக்ரம் சிங் என்பவர் - ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி இருக்கிறார். பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டார். அனைத்தும் கைப்பேசியில் பதிவாகி உள்ளது. ஆளும் காங்கிரஸ்காரராக இருந்தாலும் தப்ப முடியாது. டெல்லி சம்பவம் பெண்கள் மீதான் வன்முறை குறித்து சகல மட்டத்திலும் ஒரு விழிப்புணர்வை, வன்கொடுமையை எதிர்க்கும் மனநிலையை மக்களுக்கு தந்துள்ளது. இது மிக பெரிய மாற்றம்.

ஆயிரம் வகுப்புகள் எடுத்தாலும் தராத பாடத்தை, ஒரு சம்பவம் தந்துவிட்டது. முடிந்தால் அவர்களோடு சேர்ந்து, "குற்றவாளிகளை தண்டிக்க குரல் கொடுங்கள்" முடியவில்லை என்றால் வேறு வேலை வெட்டியை பாருங்கள். சட்டத்திலுள்ள குறைகளை சொல்லி குற்றவாளிகளை தப்பவிடாதீர்கள். குற்றவாளிகளை தம் பலத்தால் தப்ப விடும் ஈன அரசியல்வாதிகளுக்கும், முற்போக்குபேசும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது. "இந்த சட்டத்தால் ஏழைகள் தான் தண்டனை பெறுவார்கள். பணக்காரர்கள் தப்பிவிடுவார்கள். காவல்துறை, நீதித்துறையில் உள்ளவர்கள் தவறுகளை செய்துவிட்டு தப்பி விடுகிறார்கள்" என்கிறார்கள்.

மறுப்பதற்கில்லை. அதற்காக மரண தண்டனை தவறு என்பது தவறு. எத்தனையோ வழக்குகளில் காவல்துறையை சேர்ந்த குற்றவாளிகளும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். குற்றவாளிகள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தண்டனை பெற போராடுவோம். மானுடத்தின் மீது அதிக பற்றுள்ளவன், கண் முன்னே தப்பிக்கிற குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தான் போராடுவானே ஒழிய - அதை விடுத்து, "அவன் தப்பித்ததால், இவனையும் தப்பிக்க விடு" என்று சொல்ல மாட்டான்.
எந்த மோசமான குற்றத்திற்கும் மரண தண்டனையை பரிந்துரைக்க யாருக்கும் மனமில்லை. ஆனால் அத்தகையவருக்கும் பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனையை தவிர வேறு தண்டனை தெரியவில்லை. இந்தியாவில் மரண தண்டனை என்பது அரிதானது. ஆறு வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த படுபாதகனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பட்டீல் அதை ஆயுள் தண்டனையாக குறைத்தார்.   எதிர்ப்பாளர்களே. முடிந்தால் போராடும் சகோதர சகோதரிகளுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள். இல்லையேல் மௌனமாக இருங்கள். போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள். 

oosssai. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக