![]() |
![]() |
பாரிசில் குருதிஸ் (Kurdish) இனப் பெண்கள் 3-வர் இன்று பிரான்சில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள். குர்திஷ் இனத்தைச் சேர்ந்த பெண் விடுதலைப் போராளிகளான இவர்கள், PKK என்று அழைக்கப்படும் விடுதலை அமைப்பின் உயர் நிலை, 2 ஆம் இணைப்பு... |
அங்கத்தவர்களாக
இருந்த, இம் மூவரும் இன்று அதிகாலை சுடப்பட்டுள்ளார்கள். PKK அலுவலகத்தில் வைத்தே
இவர்கள் சுடப்பட்டுள்ளார்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக
பிரெஞ்சுப் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள். இவர்களது உடல்களை இன்று அதிகாலை
2h00 மணியளவில் பொலிசார் கண்டுபிடித்ததாகவும் மேலும்
அறியப்படுகிறது.
பிரான்சில்
கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பரிதி அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனைத்
தொடர்ந்து PKK அமைபின் அங்கத்தவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள். இவ்வாறு
விடுதலை போராட்ட அமைப்பில் உள்ளவர்களை, பிரான்சில் சுட்டால், அது ஒரு பெரிய
விடையமாக உருவெடுக்காது என்று குற்றம் புரிபவர்கள் அறிந்துவைத்திருக்கிறார்களா
?

குறைந்த
பட்சம் பரிதி கொலை வழக்கிலாவது, பிரெஞ்சுப் பொலிசார் தீவிர நாட்டம்
காட்டியிருந்தால், இவ்வாறான பிறகொலைகளை தடுத்திருக்க முடியும் என, பிரான்ஸ் வாழ்
தமிழ் ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.பிரான்ஸ் மண்ணில் குற்றச்செயல்களைப்
புரிந்துவிட்டு இலகுவாக தப்பிக்க முடியும் என, குற்றவாளிகள் எண்ணும் அளவுக்கு
பிரெஞ்சுப் பொலிசார் நடவடிக்கைகள் அமைந்துள்ளமை பெரும் வேதனைக்குரிய
விடையமாகும்.
News
: Source
eutamilar. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக