puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 8 ஜனவரி, 2013

கவனம் : “இறைச்சி” வாங்கும் முன் !


கவனம் : “இறைச்சி” வாங்கும் முன் !

“வெள்ளிக்கிழமை” என்றாலே முஸ்லிம்களின் பெரும்பாலான வீடுகளில் அன்றைய உணவில் இறைச்சி கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அதுவும் “மட்டன்” என்றாலே செம்மறி ஆடு இறைச்சிதான்.....மிகவும் ருசியானது......சாப்பிடுவதற்கு தெவிட்டாதது......இதனால் உலகில் பெரும்பாலான மக்கள் விரும்பி உண்ணக்கூடியதாக இருக்கின்றது.

மேலும் விஷேச தினங்கள், திருமண வலீமா விருந்துகள், பெருநாள் தினங்கள் போன்ற நாட்களிலும் இறைச்சிகள் உணவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆட்டு இறைச்சி 100 கிராம் உண்பதில் அடங்கியுள்ள சத்துக்கள் :
(Source : National Institute of Nutrition – Hyderabad )

சக்தி (Energy) 118 கலோரிகள்
ஈரப்பதம் / நீர் (Moisture) 74.2 கிராம்
புரதம் (Protein) 21.4 கிராம்
கொழுப்பு (Fat) 3.6 கிராம்
தாதுக்கள் (Minerals) 1.1 கிராம்
கால்சியம் (Calcium) 12 மி.கி
பாஸ்பரஸ் (Phosporous) 193 மி.கி
போலிக் அமிலம் (Folic acid) 4.5 மை.கி

 ஆட்டிலிருந்து அறுக்கப்படும்  பெறப்படும் அனைத்து பாகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

அதன் விலைகள் பின் வருமாறு :
கறி (எலும்புடன்)  - 1 கிலோ - 400 ருபாய்
தலை + கால் - 250 ருபாய்
கால் - 100 ரூபாய்
குடல் - 60 ரூபாய்
நுரையீரல் - 60 ரூபாய்
தோல் - 300 ரூபாய்
இரத்தம் - 50 ரூபாய்

இதற்காக  இறைச்சிக் கடைகளுக்குச் சென்று, அங்கே உள்ள கூட்டத்தில் கால்கடுக்க நின்று காத்திருந்து வாங்கிவரும் இறைச்சிக்கு வீட்டுக் கண்மணிகளிடம்  விதவிதமான கமெண்ட்ஸ்'கள்......

1. ஏங்க உங்களைப்போல கிழட்டு ஆட்டுக் கறியா பாத்து வாங்கிட்டு வர்றிய....!?

2. ஒரே ஜவ்வும் முள்ளுமா இருக்கு....நல்ல கறியா பாத்து வாங்கினாத்தான் என்ன ?

3. நானும் எவ்வளவு நேரமாத்தான் வேக வைக்குறது !? அது ஏங்க உங்களுக்கு மட்டும் “பசை”யில்லா கறியா(த்) தர்றான் !?

4. ஒரே மொச்சை வாடை வருது.....எந்த ஆட்டுக்கறிங்க வாங்கிட்டு வந்திக.....

5. எத்தனைக் கிலோ’ங்க வாங்கினிங்க......எடை குறைவா இருக்கிற மாதிரி தெரியுது !?

இப்படி மட்டம் தட்டும் வீட்டுக் கண்மணிகளிடம் நல்ல மட்டன் வாங்கி நல்ல பேர் வாங்குவதற்கு

கவனத்தில் கொள்ளவேண்டியவை :
1. ஹலாலாக அறுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

2. உயிருள்ள ஆரோக்கியமான ஆடுகள் என்பதற்குச் சான்றாக அரசின் முத்திரை ஆட்டின் தலையின் நெற்றிப் பகுதியில் அரக்கு சீல் இருக்குதா ? என்பதை கண்கானிக்கலாம்.

3. ஆடு அறுக்கப்பட்டு உறித்து வெளியே வரும் போது மீண்டும் இறைச்சியை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டதன் அடையாளம் தான் தொடையில் வைக்கப்பட்டும் முத்திரை ! இவற்றையும் கண்காணிப்பது அவசியம்.

4. தொங்கவிடப்பட்டுள்ள ஆட்டின் விரை (Testis) இல்லையென்றால் அது பெண் ஆடாக இருக்கலாம்.

5. ஒரு ஆட்டின் கழுத்து, நெஞ்சு பகுதி, முன்னங்கால் பகுதி, தொடைப் பகுதி, சிறிது ஈரல் என எல்லாம் பகுதியிலிருந்தும் சீராக இருக்குமாறு வாங்குவது நல்லது.

6. இறைச்சியின் அளவை எலக்ட்ரானிக் திராசில் நிறுத்து தர கேட்டுக்கொள்ளலாம்.

7. பளபளப்புத் தன்மை இல்லாத பழைய இறைச்சியை வாங்குவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

8. ஆடு அறுக்கப்படும் போது வெளியாகிற இரத்தத்தை சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

இறைச்சி கடைக்கான விதிமுறைகள் என்ன ?
1. கடையின் தரை மற்றும் சுவர்கள், எளிதில் சுத்தம் செய்யும் வகையில் இருக்க வேண்டும்.

2. கழிவுகளை சேகரிக்க, மூடியுடன் கூடிய குப்பைத் தொட்டி வைக்க வேண்டும்.

3. கழிவு நீரை வெளியேற்ற, முறையான இணைப்பு பெற்றிருக்க வேண்டும்.

4. ஈ, பூச்சித் தொல்லை ஏற்படாத வகையில், கம்பி வலையுடன் கதவுகள் இருக்க வேண்டும்.

5. பணி செய்வோருக்கு, தொற்று நோய் ஏதும் இல்லை என்று மருத்துவச் சான்று பெற்றிருக்க வேண்டும்.

6. உள்ளாட்சி பராமரிப்பிலுள்ள இறைச்சிக் கூடத்தில் வெட்டிய, இறைச்சியையே விற்க வேண்டும்.

7. இறைச்சிக் கூடத்திலிருந்து இறைச்சியை எடுத்துச் செல்ல, மூடியுடன் கூடிய அலுமினியப் பெட்டிகளை பயன்படுத்த வேண்டும்.

8. திறந்த நிலையில், சைக்கிள் அல்லது வேறு வண்டிகளை பயன்படுத்தல் கூடாது.

 முறையான உடற்பயிற்சியின்றி அதிகமா இறைச்சியை உணவாகப் பயன்படுத்துவோர் ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது தங்கள் உடலின் இரத்த அழுத்தம், இரத்த சோதனைகள் மற்றும் உடல் எடை போன்றவைகளை கண்காணித்துக்கொள்வது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக