
புத்ராஜெயா,
ஜனவரி 11- 2014, மலேசியாவுக்கு வருகைப்புரியும்
ஆண்டாகப்
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி 19-ஆம் தேதி, இதற்கான தொடக்க
நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்
அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார்.
எதிர்வரும்
ஜனவரி 18 முதல் 20-ஆம் தேதி வரை புக்கிட் ஜாலில் அரங்கத்தில் நடைபெறவிருக்கும்
சுற்றுலா கண்காட்சியின் மூலம் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி
குறித்து பலவேறு தரப்பினருக்கு உணர்த்தமுடியும் என சுற்றுலா அமைச்சர் டத்தோ எங்
யென் யென் தெரிவித்தார்.
மலேசியாவுக்கு வருகைப் புரியும் ஆண்டு
அடுத்த வருடம் தான் என்றாலும், அதற்கான முன்னேற்பாடுகளில் சற்றும் பின்
தங்கிவிடாமல் நிர்ணயிக்கப்பட்ட 28 லட்சம் சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதை உறுதிசெய்யும்
என அமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
vanakkammalaysia. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக