
இந்தியா
முழுவதும் தொடர்ந்து நடந்துவரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக நடந்த 9.1.2013
அன்று மாணவர் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை
புதுக்கல்லூரி அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் இந்தியா மாநிலச்
செயலாளர் புதுமடம் அனீஸ் தலைமை தாங்கினார். தமுமுக மாணவரணி மாநிலச் செயலாளர்
டாக்டர் சர்வத்கான் முன்னிலை வகித்தார். தென்சென்னை மாவட்டத் தலைவர் சீனிமுஹம்மது
கலந்து கொண்டார்.
இந்த
ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை புதுக்கல்லூரி மாணவர் இந்தியா பொருப்பாளர்கள்,
தமுமுக மாணவரணி நிர்வாகிகள் செய்திருந்தனர். ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து
கொண்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கண்டனக் கோஷங்களை
எழுப்பினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக