January 26,
2013 09:59 am
உலக
அளவில் விமான சேவை தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டதில் சீனா ஏர்லைன்ஸ் மிக மோசமானது என்ற பெயருடன் முதலிடம் பிடித்துள்ளது.
ஹம்பர்க்கை மையமாக கொண்டு ஜெட்
ஏர்லைன் விபத்து மற்றும் விவரம் குறித்த மையம் ( ஜே ஏ. சி.டி. இ. சி, ) நடத்திய
ஆய்வு அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்துள்ள விபத்துக்களை கணக்கில் கொண்டு இந்த முடிவு
அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான சேவை வழங்குவதில் ஐரோப்பாவின் பின்லாந்தில் உள்ள
பின்ஏர் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. ஏர் நியூஸிலாந்து, கேதே
பசிபிக், எமிரேட்ஸ் ஏர்
நிறுவனங்கள் சிறந்த சேவை தரும் பட்டியலில் முறையாக 2, 3 மற்றும்
4 ம் இடங்களை பிடித்துள்ளது. உலகின் மிக பாதுகாப்பு குறைந்த விமான
சேவைகள் பட்டியலில் ஏர் இந்தியா விமான சேவைக்கு மூன்றாவது இடம்
கிடைத்துள்ளது.
முதல்
10 இடங்களில் உள்ள எந்தவொரு விமான சேவையும் கடந்த 30 வருடங்களில் ஒரு முறை
கூட விமான விபத்துக்களை சந்தித்ததில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில்
ஆபத்தான மிக பாதுகாப்பு குறைந்த விமான சேவையாக முதலாவது இடத்தில் சீனா
ஏர்லைன்ஸ், இரண்டாவது இடத்தில் டாமின் ஏர்லைன்,மூன்றாமிடத்தில் இந்திய
ஏர் இந்திய நிறுவனம் இடம் பிடித்துள்ளது. இந்த ஆய்வில் சமீபத்திய விபத்துக்கள் குறித்தும்
ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
thamilan thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக