puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 14 ஜனவரி, 2013

தம்மாம் சர்வதேச இந்திய பள்ளி மாணவர்கள் சாதனை


பொது
ஞாயிற்றுக்கிழமை, 13 ஜனவரி 2013 23:05
தம்மாம் சர்வதேச இந்திய பள்ளி மாணவர்கள் சாதனை
அகில இந்திய மற்றும் வெளிநாடுகளில் படிக்கும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளுக்கான தேசிய விளையாட்டுப் போட்டி சென்னை வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. இதில் தம்மாம் சர்வதேச இந்திய பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் கலந்துக் கொண்டு பல பதக்கங்களை வென்றனர். அரபு நாடுகளில் உள்ள இந்தியப் பள்ளியிலிருந்து சென்று வெற்றி வாகை சூடியுள்ள இந்நிகழ்வு பலரையும் வியக்க வைத்துள்ளது.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரோஸ் அஷ்ரப் அலி 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், 4X100 மீட்டர் மற்றும் 4X400 தொடர் ஓட்டப் பந்தயங்களில்(ரிலே) கலந்துக் கொண்டு 3ம் இடத்தை அடைந்தார். மேலும், பத்தாம் வகுப்பு படிக்கும் நசீஃப், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அப்துல்லாஹ் ஜக்கரியா மற்றும் ரிஸா ரஹீம் ஆகியோர் 4X100 மீட்டர் மற்றும் 4X400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயங்களில் (ரிலே) மூன்றாம் இடத்தைப் பெற்றனர். இதில் அப்துல்லாஹ் ஜக்கரியா என்ற மாணவன் சென்னையைச் சேர்ந்த சவூதி வாழ் பொறியியல் வல்லுனர் ரபீக் ஜக்கரியா அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர் முஹம்மது ஷபி, பயிற்சியாளர் அப்துல் லத்தீப் ஷேக், மேலாண்மை குழு தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் வாழ்த்தினர்.
செய்தி உதவி: அரப் நியூஸ்

makkalmanasu thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக