January 26,
2013 10:04 am
கோர்ட்டில் விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது, வழக்கை
விசாரித்த நீதிபதி,
அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். இது தொடர்பாக அவர்
மீது, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. ரஷ்யாவின் கிழக்கு
பகுதியில் உள்ள,
பிளாகோவெஷ்சென்ஸ்க் கோர்ட்டின் நீதிபதி ஈவ்ஜெனி மாக்னோ.
மோசடி
வழக்கு ஒன்றை இவர், சமீபத்தில் விசாரித்தார். கோர்ட்டில் இருதரப்பு
வழக்கறிஞர்கள் விவாதம் நடத்தி கொண்டிருக்க, அதை
கவனிக்காமல்,
மொபைல் போனில், வீடியோ
கேம் விளையாடிக் கொண்டிருந்தார். பின், தன்னை
மறந்து, குறட்டை
விட்டு தூங்கினார்.
வழக்கறிஞர் தரப்பு வாதம் முடிந்த விஷயத்தை, ஊழியர்கள் தெரிவிக்க, திடீரென விழித்து கொண்ட நீதிபதி ஈவ்ஜெனி, குற்றம்சாட்டப்பட்டவருக்கு, ஐந்தாண்டு சிறை
தண்டனை அறிவித்தார். மனித உரிமை அமைப்பை சேர்ந்த ஒருவர், நீதிபதி மொபைல்போனில் வீடியோ கேம் விளையாடியது,குறட்டை
விட்டு தூங்கியது அனைத்தையும், ரகசிய
கேமராவில் பதிவு செய்து,
சிறை தண்டனை பெற்றவரின் உறவினர்களுக்கு, அனுப்பி
வைத்தார்.
உரிய
முறையில் வழக்கை விசாரிக்காமல், ஐந்தாண்டு தண்டனை அளிக்கப்பட்டதை எதிர்த்து, தண்டனை
பெற்றவரின் உறவினர்கள்,
கோர்ட்டில் புகார் தெரிவித்தனர்.இதையடுத்து, சம்பந்தப்பட்ட கோர்ட், நீதிபதி
ஈவ்ஜெனி மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
thamilan. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக