ஜனவரி 31- எதிர்வரும்
13-வது பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரத்தியேக இணையதளத்தை தேர்தல் ஆணையம்
அறிமுகப்படுத்தியுள்ளது.
தேர்தல்
வேட்பாளர்கள் குறித்த விவரங்கள், எண்ணிய வாக்குகளின் முடிவுகள், முண்ணிலையில்
இருக்கும் கட்சியின் விவரங்கள், தேர்தல் ஆய்வுகள் என அனைத்தையும் இந்த இணையதளத்தில்
பெற்றுக் கொள்ளலாம்.
மேலும்
தேர்தல் பிரச்சரங்கள் குறித்த தகவல்களும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம்
செய்யப்படும் என தேர்தல் ஆணைய தலைவர் டான் ஸ்ரீ அப்துல் அசீஸ் தெரிவித்தார்.
கடந்தாண்டு
இறுதி வரை, 13.3 மில்லியன் பேர் தங்களை வாக்காளராக பதிந்துக் கொண்டிருப்பதாகவும்,
இந்த எண்ணிக்கை 2008-ஆம் ஆண்டை காட்டிலும் 2.6 மில்லியன் அதிகம் எனவும் அவர்
குறிப்பிட்டார்.
இருப்பினும்
இன்னும் 22 விழுக்காடு மலேசியர்கள் இன்னும் வாக்களராக பதிந்துக் கொள்ளவில்லை என்று
கூறினார்.
13-வது
பொதுத்தேர்தலுக்காக 400 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. 12-வது
பொதுத்தேர்தலோடு ஒப்பிடுகையில் 150 மில்லியன் ரிங்கிட் அதிக செலவில் இத்தேர்தல்
நடைப்பெறவிருக்கிறது. இந்த தடவை அதிகமான வாக்காளர்கள் பதிவு செய்திருப்பதும் மேலும்
தேர்தல் ஆணைய அதிகாரிகளின் கட்டணம் உயர்வு கண்டதே இந்த அதிகமான பண ஒதுக்கீட்டுக்கு
காரணமாக கருதப்படுகிறது.
இதற்கிடையில்,
பிப்ரவரி 20-ஆம் தேதியிலிருந்து மார்ச் 20-ஆம் தேதிக்குள் நாடாளுமன்றத்தை
கலைக்காவிட்டால், நாடாளுமன்றம் தன்னிச்சையாக கலைக்கப்பட்டுவிடும்.
நாடாளுமன்றம்
கலைக்கப்பட்டவுடன், முன்மொழியப்பட்ட தேர்தல் வேட்பாளர்களின் பட்டியலை
நிர்ணயிக்கவும், தேர்தல் திகதியை முடிவு செய்யவும் மற்றும் தேர்தல் சம்மந்தப்பட்ட
இதர பணிகளை செய்யவும் சுமார் 60 நாட்கள் இருப்பதாகவும் டான் ஸ்ரீ அப்துல் அசீஸ்
தெரிவித்தார்.
vanakkammalaysia. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக