- Wednesday, 16 January 2013 10:20
கடந்த சில தினங்களுக்கு முன்னர் காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீராரின் குக்கிராமத்திற்கு திடிரேன அடிப்படை வசதிகள் அசுர வேகத்தில் செய்து கொடுக்கப்பட்டு வருவதாக கிராம வாசிகள் தெரிவித்துள்ளனர்.
கொல்லப் பட்ட வீரர்களில் ஒருவரான ஹேம்ராஜின் தலையை பாக் ராணுவம் கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதில் கொதிப்படைந்த ஹேம்ராஜின் குடுமபத்தினர் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு, ஹேம்ராஜின் தலையை மீட்டுத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹேம்ராஜின் சொந்த கிராமம் உத்தர பிரதேசத்தில் உள்ள கைராயர் கிராமமாகும். இந்த குக்கிராமம் டெல்லியில் இருந்து 160 கிலோ மீட்டர் தூரத்திலும், உ.பியின் மதுராவில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. உண்ணாவிரதம் மேற்கொண்டு இருக்கும் ஹேம்ராஜின் வீட்டுக்கு பல அரசியல் தலைவர்கள் அன்றாடம் ஆறுதல் சொல்ல சென்ற வண்ணம் உள்ளனர்.
இதனாலேயே இந்த குக்கிராமத்தின் அடிப்படை வசதிகள் அசுர வேகத்தில் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கிராம மக்களே இப்படியும் நடக்குமா என்று ஆச்சரியப் படும் அளவிற்கு, சாலை, மற்றும் குடிநீர் வசதிகள், சுகாதார மேம்பாடுகள் என்று குக்கிராமமே அழகிய கிராமமாக மாறிவிட்டதாம். அதோடு ஆரம்பப் பள்ளி கூட இல்லாத அந்த கிராமத்தில் இன்னும் சில நாட்களில் ஆரம்பப் பள்ளிக் கட்டிடமும் திறக்கப்பட உள்ளதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.
4tamilmedia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக