puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 26 ஜனவரி, 2013

விஸ்வரூபம் திரைப்படத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இன்று பார்க்கிறார்



கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் இன்று பார்வையிடுகிறார்.

இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல சித்தரித்து அவமதிப்பதாக கூறப்படும் குற்றசாட்டு குறித்து முடிவு செய்வதற்காக, விஸ்வரூபம் திரைப்படத்தை அவர் பார்வையிடுகிறார்.

விஸ்வரூபம் திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், தயாரித்துள்ளது. இந்த படம் வெளியிடப்படும் நிலையிலிருந்த போது 23 இஸ்லாமிய அமைப்புக்களின் கடுமையான எதிர்ப்புக்களை சந்திக்க வேண்டி இருந்தது. இஸ்லாமிய மக்களையும், குரானையும் தவறாக படத்தில் சித்தரித்துள்ளதாக அவர்கள் போர்கொடி உயர்த்தினர்.

இதை அடுத்து தமிழக அரசு படத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது. கமல் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தடையை விலக்கக் கோரி மனுத் தாக்கல் செய்யப் பட்டது. படத்தை பார்த்துவிட்டுத்தான் முடிவெடுப்போம் என்று கூறிய நீதிபதிகள் தடை உத்தரவை 28 ஆம திகதி  வரை நீடித்தனர்.

அதன்படி சென்னை உயர்ந் நீதி மன்ற நீதிபதி வெங்கட்ராமன் இந்த படத்தை இன்று பார்க்கிறார். பார்த்த பின்னர் படம் வெளியிடுவது குறித்தும், படம் இஸ்லாமியர்களை இழிவு படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதா என்பது குறித்தும் அறிவித்து அதன் படி, படத்திற்கான தடை உத்திரவை நீக்குவதா, வேண்டாமா என்று தீர்ப்பளிப்பார்.
நீதிபதி வெங்கட் ராமனுடன், அரசு அதிகாரிகள், மற்றும் இஸ்லாம் அமைப்பினர்கள் சேர்ந்து ஒன்றாக படம் பார்க்க உள்ளனர் என்றும் தெரிய வருகிறது.

இதேவேளை விஸ்வரூபம் பல்வேறு தடைகள், எதிர்ப்புக்களை மீறி இந்தியாவின் வேறு மாநிலங்களில் நேற்று நள்ளிரவு முதல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கேரளாவில் பல்வேறு முஸ்லீம் அமைப்புக்களின் எதிர்ப்புக்களை மீறி படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கேரள தணிக்கை குழு படத்தை அனுமதித்ததை தொடர்ந்து இதனை காட்சிப்படுத்த தமக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
ஈரன்குளம், இடுக்கை, பாலக்காடு ஆகிய பகுதிகளில் மாத்திரம் விஸ்வரூபம் திரையிட தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதாகவும், ஏனைய பகுதிகளில் படம் திரைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கேரள திரைப்படக்காட்சி அமைப்பின் தலைவர் வி.மோஹனன் தெரிவிக்கையில், கேரளாவில் விஸ்வரூபம் பல திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினரின் பாதுகாப்பின் கீழ் இவை வெற்றிகரமாக காண்பிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

சி.பி.எம் இன் மாநில பொதுச்செயலாளர் பினராயி விஜயன் கருத்து தெரிவிக்கையில், திரைப்படத்தை பார்த்துவிட்டு விமர்சிப்பதே பொருத்தமனாது என்றார்.

இதேவேளை தமிழ்நாட்டில் ஒரு சில இஸ்லாமிய அமைப்புக்கள் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிராக குரல் கொடுப்பதில் எவ்வித நியாயமும் இல்லை. திரைப்படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் நோக்கில் எவ்வித காட்சிகளும் சொருகப்படவில்லை என Firstpost, India Today, Behindwoods ஆகிய முன்னணி ஊடகங்கள் தமது விஸ்வரூபம் தொடர்பில் வெளியிட்டுள்ள திரைவிமர்சனத்தில் தெரிவித்துள்ளன.

4tamilmedia thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக