29 Jan 2013
சென்னை:முற்போக்கு பிராமணனான கமலஹாசன் இயக்கி
தயாரித்துள்ள அமெரிக்க ஆதரவுப் பெற்ற ‘விஸ்வரூபத்தின்’ முதல் பாகத்திற்கு எதிரான
எதிர்ப்புகள் நாடு முழுவதும் கிளர்ந்து எழுந்துள்ளது. அதேவேளையில்
இத்திரைப்படத்தின் 2-வது பகுதியின் சூட்டிங்கும் வெளிநாட்டில் நடைபெற்றுவருகிறது.
இதன் 10 சதவீத சூட்டிங் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விஸ்வரூபத்திற்கு எதிரான முஸ்லிம்களின்
எதிர்ப்புகளை வகுப்பு வெறியாக சித்தரிக்க வெளிப்படையாக அமெரிக்க
எதிர்ப்பாளர்களாகவும், உள்ளுக்குள் அமெரிக்க அடிமைகளாக விளங்கும் கம்யூனிஸ்டுகளின்
இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃப்.ஐயும், பாசிச ஹிந்துத்துவா தீவிரவாத மாணவர் அமைப்பான
யுவமோர்ச்சாவும் முயற்சி செய்து வருகின்றன.
விஸ்வரூபம் திரைப்படத்தில் தீவிரவாதிகளாக
சித்தரிக்கப்படுவோரை காண்பிக்கும் பொழுதெல்லாம் திருக்குர்ஆன் வசனங்கள்
ஓதப்படுவதும், தொழுகை காட்சிகளும் இடம்பெறுகின்றன. அமைதியை விரும்பும்
முஸ்லிம்களின் உணர்வுகளை காயப்படுத்தும் விதமாக திருக்குர்ஆனையும், தொழுகையையும்
காட்டியது முஸ்லிம் சமுதாயத்தில் அனைத்து தரப்பினரையும் கொந்தளிக்க
வைத்துள்ளது.
தாலிபான் போராளியை அமெரிக்க ஏஜண்டாக தவறாக கருதி
ஆப்கானிகள் தூக்கிலிடும் பொழுது பின்னணியில் முழங்குவது திருக்குர்ஆன்
வசனங்களாகும். கருத்து சுதந்திரத்தின் பெயரால் முஸ்லிம்களை அவமதிக்கும் திரைப்படம்
தான் விஸ்வரூபம் என்று இத்திரைப்படத்தை கண்டவர்கள் கூறுகின்றனர்.
முஸ்லிம்கள் எதிர்ப்பார்கள் என்று உணர்ந்தே
கமலஹாசன் தவ்ஃபீக் என்ற முஸ்லிம் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். அண்மைக் காலங்களில்
மலையாளத்திலும், தமிழிலும் ஹாலிவுட் திரைப்படங்களின் ஊனமான பதிப்புகள்
வெளியாகின்றன. பல திரைப்படங்களுக்கும் நிதி அளிப்பது அமெரிக்க நிறுவனங்களாகும்.
கமல்ஹாசனின் விஸ்வரூபத்திலும் அதே முறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது
thoothuonline thanks
thoothuonline thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக