- Friday, 18 January 2013 17:41

ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி மூன்றாவது முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
முன்னர் அங்கு ஆட்சி புரிந்த பாரதிய ஜனதா மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகளின் கூட்டணி ஆட்சி சில தினங்களுக்கு முன்னர் ஆட்டம் கண்டிருந்தது. ஆட்சி பொறுப்பை தங்களுக்கு தரவேண்டும் என கோரிய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அது நடக்காததால் பாஜகவுக்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கியது.
இதனால் கடந்த ஜனவரி 8ம் திகதி ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து சட்டசபையை கலைக்குமாறு முதலமைச்சராக இருந்த அர்ஜுண் முண்டா கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை ஆளுனர் சையது அகமது நிராகரித்து விட்டதால், முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே மாற்று அரசு அமைக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் வெற்றி பெறாததை தொடர்ந்து குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோரி ஆளுனர் சையது அகமது மத்திய அர்சுக்கு பரிந்துரை செய்தார்.
இதை கடந்த ஒரு வார காலமாக பரீசிலனை செய்து வந்த மத்திய அரசு, தற்போது குடியரசு தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அங்கு புதிதாக தேர்தல் நடத்தப்படும் வரை மாநில சட்டசபை இடைநீக்கம் செய்து வைக்கட்டிருக்கும்.
கடந்த 2000ம் ஆண்டு இந்தியாவில் புதிய மாநிலமாக உருவான ஜார்க்கண்டில், 82 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபை உள்ளது. அங்கு இதுவரை நடைபெற்ற எந்த தேர்தலிகளுமே பெரும்பான்மையாக எவரும் வெற்றி பெறவில்லை. இதனால் கடந்த 12 ஆண்டுகளில் அம்மாநிலத்தில் இரு முறை குடியரசு தலைவர் ஆட்சி நிலவியது. தற்போது மூன்றாவது முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜார்க்கண்ட் ஆளுனரின் ஆலோசகர்களாக, மத்திய உள்துறை முன்னாள் செயலர் மதுக்கர் குப்தா, மத்திய ரிசர்வ் காவல்துறை படையின் முன்னாள் டி.ஜி.பி விஜய்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
4tamilmedia. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக