puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 17 ஜனவரி, 2013

சுடுகாட்டில் வீசியெறியப்பட்ட முதியவர் - நெகிழ வைக்கும் சம்பவம்!


சுடுகாட்டில் வீசியெறியப்பட்ட முதியவர் - நெகிழ வைக்கும் சம்பவம்!


January 17, 2013  11:57 am
"வீடு வரை உறவு வீதிவரை மனைவி
காடு வரை பிள்ளை  கடைசிவரை யாரோ?" நெஞ்சை உலுக்கும் இந்த பாடலை போலவே ஒரு முதியவரின் வாழ்க்கை ஈரமுள்ள இதயங்களின் நெஞ்சை உலுக்கியுள்ளது.



உறவுகளால் சுடுகாட்டில் வீசியெறிப்பட்ட குப்புசாமி என்ற 90 வயது முதியவர் இறந்துவிட, சொந்தமே இல்லாத சிலர் அவரின் இறுதி சடங்கை நடத்தி மனிதத்தை உயிர்பித்தனர்.
 

சேலம் டி.வி.எஸ் சுடுகாட்டில் குப்புசாமி பெரியவரின் இறுதி சடங்கில் தானும் ஒருவராக பங்கேற்ற  சமூக ஆர்வலர் கோபிநாத் நம்மிடம், ´´இந்த 90 வயது பெரியவர்  சூதுவாது அறியாதவருங்க. தாதகாப்பட்டி பகுதியில நெசவு தொழில் செஞ்சுட்டு வந்தவரு. ஒரு பிரசவத்தின் போது சின்ன வயசுலேயே மனைவி இறந்துவிட மறு கல்யாணம் செஞ்சுக்காம குழந்தைகளை வளர்த்து வந்தாரு. இவருக்கு பாஞ்சாலின்னு ஒரே  பொண்ணுதான்.
 

அவங்களும் காலமாகிட்டாங்க. அங்கிருந்த பெருமாள் கோயிலோட மேட்டுல தான் தங்கினாரு. இந்த நிலையில ரோட்டில் போன ஒரு ஆட்டோ இடித்துவிட கை ஒடிஞ்சு அரசு மருத்துவமனையில சேர்க்கப்பட்டாரு. குணமாகி வீடு வந்தவரை உறவுகள் கண்டுக்கலை. இவர் பாரமா இருக்கார்னு, அவரு உறவினர் மாணிக்கமும், மக வயித்து பேரன் ஜிமிக்கியும்  சீலநாயக்கன்பட்டி ராமைய்யாகாடு சுடுகாட்டுல வீசிட்டு போய்ட்டாங்க. சுடுகாட்டுக்கு வந்தவங்க சொல்லி,இத கேள்விப்பட்டு தான் நாங்க வந்தோம். ஆனாலும் அந்த பெரியவர் உழைப்பாளி, நேர்மையானவரு. தன்னோட இறுதி சடங்கு கூட யார் தயவிலும் நடந்து சிரமம் ஏற்படுத்தக்கூடாதுன்னு 2000ரூபா சேத்து வச்சு மாணிக்கத்துகிட்ட கொடுத்துருக்காரு. அப்படிப்பட்ட நல்ல மனுசனை போயி எப்படித்தான் சுடுகாட்டுல வீசினாங்களோ!

அந்த பணத்தையும் எடுத்துகிட்டு மாணிக்கம் போயிட்டாரு. அதுக்கப்புறம் நாங்க லைப் ட்ரஸ்ட் கலைவாணியிடம் சேர்த்தோம். பின் இதையறிந்த தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், மோகன்ராஜ் மற்றும் மாநகர செயலாளர் ராதாக்ருஷ்ணன் ஆகியோர் விஜயகாந்த் சொன்னாருன்னு பெரியவர அரசு மருத்துவமனையில சேர்த்தாங்க. ஆனா நீண்ட நாள் சாப்பிடாம உடலும் தளர்ந்து மனசும் சோர்ந்த அந்த பெரியவர் மாட்டு பொங்கல் அன்னைக்கு அதிகாலை 2 மணியளவுல நம்மை எல்லாம் விட்டுட்டு போயிட்டாரு. மாட்டையும் கூட உயிரா பார்க்குற நம்ம சமுதாயத்துல தான் மனுசனை கூட மிருகமா பார்த்து தள்ளி வச்சுட்டாங்க´ என்றார் வேதனையோடு.

பெரியவரின் இறுதி சடங்கிற்கு அவர் உறவினர்கள் யாரும் வராததால் லைப் ட்ரஸ்ட் அமைப்பை சேர்ந்த கலைவாணியே அனைத்தும் செய்தார். டி.வி.எஸ் சுடுகாட்டில் மயான வேலை செய்யும் சீதா என்ற 19 வயது பெண் குழி வெட்டி அனைத்து சடங்கையும் செய்ய குப்புசாமி பெரியவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பெண்கள் இடுக்காட்டிற்க்கு சென்றால் தீட்டு என அனுமதிக்காத சமூகம் தான் பெரியவரை கண்டுக்கொள்ளாமல் தூக்கி வீசினர். எந்த சடங்கும் தடையாய் இருக்காது என எண்ணிய இந்த இரு பெண்களும் இறுதி சடங்கை பக்தியோடு செய்து அன்பை வெளிபடுத்தினர்.
 

உறவுகளால் வீசி எறியப்பட்டு, உறவுகள் இல்லாமல் இறந்த பெரியவர், அன்பு- அன்பு - அன்பு மட்டுமே நிறைந்த புதிய உறவுகளோடு மண்ணுக்குள் உறங்க தொடங்கினார்.\



thamilan. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக