puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 15 ஜனவரி, 2013

மைக்ரோசாப்ட் தேர்வில் 9 வயது சிறுவன் சாதனை

மைக்ரோசாப்ட் தேர்வில் 9 வயது சிறுவன் சாதனை
[ செவ்வாய்க்கிழமை, 15 சனவரி 2013, 12:18.20 பி.ப GMT ]
மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் தேர்வில் 9 வயதே ஆன தமிழகத்தைச் சேர்ந்த பிரணவ் கல்யாண் என்ற மாணவர் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஏ.எஸ்.பி. டாட். நெட் பிரிவில் (ASP.NET), அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநருக்கான தேர்வை கடந்த 12ம் திகதி நடத்தியிருந்தது.

கம்ப்யூட்டர் பட்டதாரிகள்தான் பொதுவாக இத்தேர்வை எழுதுவது வழக்கம்.
ஆனால் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 4ம் வகுப்புப் படிக்கக் கூடிய 9 வயதே ஆன பிரணவ் கல்யாணும் தேர்வு எழுத அனுமதி கிடைத்தது.
இத்தேர்வு எழுதியதுடன் மட்டுமின்றி சிறுவன் பிரணவ் வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
சாதனை நாயகனான பிரணவ்-ன் தந்தை கல்யாண், தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்குப் புகழ்பெற்ற பாலமேட்டைச் சேர்ந்தவர்.
இவர் கலிபோர்னியாவில் அமெரிக்க வங்கியில் பணியாற்றி வருகிறார்.
பிரணவ்வின் தாயார் விசாலாட்சியும் அமெரிக்க வங்கியில் நிதி ஆய்வாளராக பணியாற்றுகிறார்.
பிரணவ்வின் இந்த சாதனைக்கு அவரது குடும்ப நண்பர்களான மணிவண்ணன், நதியா, சதீஷ் உள்ளிட்டோர்தான் உந்துசக்தியாக இருந்துள்ளனர் என்று அவரது பெற்றோர் பெருமைப்படுகின்றனர்.

newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக