puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 15 ஜனவரி, 2013

குடும்பத்திற்காக 90 வயது முதியவரை மணந்தேன்! 15 வயது சிறுமியின் பரபரப்பு பேட்டி

[ செவ்வாய்க்கிழமை, 15 சனவரி 2013, 12:13.13 பி.ப GMT ]
சவுதி அரேபியாவில் பெருந் தொகையை வரதட்சணையாக கொடுத்து, 15 வயது சிறுமியை 90 வயது முதியவர் திருமணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சவுதி அரேபியாவை சேர்ந்தவர் பென் அலி மஷ்ரகி(வயது 90). இவர் சமீபத்தில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி சரிபா அலியை திருமணம் செய்து கொண்டார்.
இத்திருமணத்திற்கு மனித உரிமை ஆர்வலர்களும், பெண்கள் நல அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
ஆனால் திருமணம் சட்டப்பூர்வமான ஒன்று என்றும், சிறுமியை மணப்பதற்காக 17,500 டொலர் பணத்தை குறித்த சிறுமியின் பெற்றோருக்கு கொடுத்ததாகவும் பென் அலி தெரிவித்திருந்தார். மறுபடியும் என் மனைவியை கொண்டு வந்து விடுங்கள் என்றும் வற்புறுத்தி வந்தார்.
இந்நிலையில் தன் குடும்பத்திற்காகவே முதியவரை திருமணம் செய்து கொண்டதாக சரிபா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இவர் கூறுகையில், நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர், என்னுடன் பிறந்தவர்கள் 12 பேர்.
சொந்த வீடில்லாமல், குடிசையில் வசித்து வருகிறோம். குளிர் காலங்களிலும், மழை காலங்களிலும் மிகுந்த சிரமத்தை சந்திப்போம்.
எனவே தான் பெரும் தொகையை பெற்றுக்கொண்டு குடும்பத்திற்காக முதியவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தேன் என்று தெரிவித்துள்ளார்.

newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக