ராமநாதபுரம், ஜன. 11-
ராமநாதபுரத்தில் 4 சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 2013-ஐ மாவட்ட கலெக்டர் நந்தகுமார் வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
மாவட்டத்தில் மொத்தம் 9,82,610 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 4,94,547, பெண் வாக்காளர்கள் 4,88,008 பேரும், 55 திருநங்கை வாக்காளர்கள் உள்ளனர்.
பரமக்குடி தொகுதியில் 1,11,228 ஆண் வாக்காளர்களும், 1,11,134 பெண் வாக்காளர்களும், 21 திருநங்கை வாக்காளர்களும் மொத்தம் 2,22,383 வாக்காளர்கள் உள்ளனர்.
திருவாடானை தொகுதியில் 1,20,064 ஆண் வாக்காளர்களும், 1,17,117 பெண் வாக்காளர்களும், 19 திருநங்கை வாக்காளர்களும் மொத்தம் 2,37,197 வாக்காளர்கள் உள்ளனர்.
ராமநாதபுரத்தில் 1,24,894 ஆண் வாக்காளர்களும், 1,23,901 பெண் வாக்காளர்களும், 8 திருநங்கை வாக்காளர்களும் மொத்தம் 2,48,803 வாக்காளர்கள் உள்ளனர்.
முதுகுளத்தூர் தொகுதியில் 1,38,364 ஆண் வாக்காளர்களும், 1,35,856 பெண் வாக்காளர்களும், 7 திருநங்கை வாக்காளர்களும் மொத்தம் 2,74,227 வாக்காளர்கள் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் ராமநாதபுரம் கோட்டாட்சியர் லாரன்ஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் குரிஷிதாபேகம், அரசியல் கட்சி பிரதிநிதிகள் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில்குமார், தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் திவாகர், இளைஞரணி துரைச்சாமி, மாவட்ட துணை செயலாளர் அகமது தம்பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் என்.கே.ராஜன், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் கார்குடி சேகர், பாரதீய ஜனதா கட்சி சார்பில் நாகராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்காளர் வரைவு பட்டியலை பெற்று கொண்டனர்.
maalaimala thanks

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக