puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 10 ஜனவரி, 2013

8வது மாடியிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிர் பிழைத்த அதிசயம்

[ வியாழக்கிழமை, 10 சனவரி 2013, 09:36.36 மு.ப GMT ]
எட்டாவது மாடியிலிருந்து விழுந்தும் எவ்வித பாதிப்புமின்றி 3 வயது சிறுவன் உயிர் தப்பியுள்ள ஆச்சர்ய சம்பவம் உக்ரைனில் இடம் பெற்றுள்ளது. வடகிழக்கு உக்ரைன் நாட்டில் உக்ரைனியன் நகரில் இச்சிறுவன் வசித்து வருகிறான்.
அடுக்கு மாடி குடியிறுப்பில் எட்டாவது மாடியில் தனது தயாருடன் வசித்து வரும் அந்த சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த போது வீட்டின் ஜன்னலை திறந்து எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தலைகுப்புற கீழே விழுந்தான்.
அவனது அதிர்ஷ்டம், ஜன்னலுக்கு நேர்கீழே, அவன் விழுந்த இடத்தில், மிருதுவான பனிக்கட்டி குவியல் இருந்ததனால் காயங்களுடன் உயிரிழக்காமல், அந்த சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
சில சிராய்ப்புகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவனது உடல்நிலை சீராக உள்ளதாக டொக்டர்கள் தெரிவித்தனர்.
இது போன்ற உயரமான கட்டிடங்களில் இருந்து கீழே விழுந்த சிலர், அரிதாக உயிர் பிழைத்த சம்பவங்கள் இதற்கு முன்னரும் நிகழ்ந்துள்ளன.
கடந்த 2008ம் ஆண்டு, அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில், ஜன்னல் கண்ணாடியை துடைக்கும்போது 47வது மாடியில் இருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிர் பிழைத்தார்.
இதேபோல் சீனாவில் 2009ம் ஆண்டு 27வது மாடியின் ஜன்னல் வழியே கீழே விழுந்த 29வயது சீனப்பெண் ஒருவர் உயிர் தப்பினார்.
2010ம் ஆண்டு 20வது மாடி ஜன்னல் வழியே தவறி விழுந்த 10 வயது சிறுவன், கீழே நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விழுந்ததில் அவன் காயங்களுடன் தப்பினான் என்பது குறிப்பிடத்தக்கது.

newsonews. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக