puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 29 ஜனவரி, 2013

மகளை கற்பழித்த தந்தைக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை: கோவை கோர்ட்டில் தீர்ப்பு


[ திங்கட்கிழமை, 28 சனவரி, 2013, ]
மகளை கற்பழித்த தந்தைக்கு
கோவை புலியங்குளத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பழனிச்சாமி (50). இவர் மனைவி கலாமணி (வயது 45) மற்றும் பிளஸ் படிக்கும் 17 வயது மகளுடன் வசித்து வந்தார். மனைவி கலாமணி அருகில் உள்ள பேக்டரிக்கு இரவு வேலைக்கு சென்று வரக்கூடியவர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான பழனிச்சாமி, தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2009-ம் ஆண்டு போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்தனர். பின்னர் அவர் மீதான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.பி. சுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. விசாரணைக்கு பிறகு இந்த வழக்கின் தீர்ப்பு இன்று மாலை அறிவிக்கப்பட்டது.

அந்த தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:-

குற்றவாளியான ஓட்டுநர் பழனிச்சாமி கடந்த 2007-ம் ஆண்டு முதல் தனது மகளை மிரட்டி கெடுத்து வந்திருக்கிறார். இதுகுறித்து தாயிடம் சொன்னால் கொன்றுவிடுவேன் என்று, பழனிச்சாமி தொடர்ந்து தனது மகளை மிரட்டியும் வந்திருக்கிறார். இதில் 2 முறை கர்ப்பமான அந்த சிறுமிக்கு ஒரு முறை கரு கலைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது முறையாக கர்ப்பமான அந்த சிறுமிக்கு, 6 மாத கருவும் அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கப்பட்டு இருப்பது புலனாகிறது.

எனவே கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல் குற்றங்களுக்காக, குற்றவாளியான பழனிச்சாமிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி உத்தரவிடுகிறேன்.

இவ்வாறு அந்த தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.

viyapu. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக