puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

தில்லி மாணவி பாலியல் பலாத்காரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் ஜனவரி 7ஆம் தேதி ஆஜர்படுத்தும்படி தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தில்லி மாணவி பாலியல் பலாத்காரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் ஜனவரி 7ஆம் தேதி ஆஜர்படுத்தும்படி தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ஆய்வு செய்த நீதிபதி ''குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கொலை கொலை முயற்சி பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது'' என்றார்.கைது செய்யப்பட்டுள்ள சிறுவன் மீதும் ஜனவரி 7ஆம் தேதி சிறார் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் என்று தில்லி போலீஸார் தெரிவித்தனர்.நாடு முழுவதும் பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் இந்த வழக்கு விசாரணை நீதிபதி நம்ரிதா அகர்வால் முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்குரைஞர் ராஜீவ் மோகன் முன் வைத்த வாதம்:சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவியும் அவரது நண்பரும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளனர். உயிரிழப்பதற்கு முன்பு மாணவி அளித்த வாக்குமூலம் மரண வாக்குமூலமாகக் கருதப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த குற்றச்சாட்டுகள் நிரூபணமாகும் கட்டத்தில் உள்ளன.மாணவி அவரது நண்பரின் உடமைகள் பொருள்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களின் உடைகளில் இருந்த ரத்தக் கறை அனைத்தும் பாதிக்கப்பட்டவரின் ரத்தம்தான் என்று மத்திய தடயவியல் ஆய்வுக் கூடம் உறுதி செய்துள்ளது.மாணவி அவரது நண்பர் ஆகியோரிடம் பறித்த ரத்தக் கறைகள் படிந்த துணிகளைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தீயிட்டு அழித்துள்ளனர். அப்படியும் தீயில் கருகாத துணித் துண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள ரத்தக் கறையும் பாதிக்கப்பட்டவரின் ரத்த மாதிரியும் ஒத்துப் போகிறது. இவையனைத்தையும் அடிப்படையாக வைத்துத்தான் 5 பேர் மீது கொலை பாலியல் வன்கொடுமை பாலியல் பலாத்காரம் ஆதாரங்களை அழித்தல் கொலை முயற்சி கடத்தல் கூட்டாக வழிப்பறி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக 80 சாட்சிகளும் 12 ஆதாரங்களும் உள்ளன என்று அரசு வழக்குரைஞர் ராஜீவ் மோகன் கூறினார்.மேலும் இந்த வழக்கில் உயிரிழப்பதற்கு முன்பு மாணவி அளித்த வாக்குமூலத்தை வழக்குரைஞர் ராஜீவ் மோகன் நீதிபதி முன்பு சமர்ப்பித்தார். 

tamilantelevision thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக