- Monday, 28 January 2013 13:02
டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 6வது நபர், 18வயதுக்கு உட்பட்டவர் என சிறுவர் சீர்திருத்த நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
குறித்த நபர் 1995ம் ஆண்டு, ஜூன் 4ம் திகதியே பிறந்தவர் தான் எனவும் அவரது வயது 17 தான் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதையடுத்து குறித்த ஆறாவது குற்றவாளி மாத்திரம் தொடர்ந்து சிறுவர் நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கடந்த டிச.16ம் திகதி டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து கைதானவர்கள் ஆறுபேருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வந்தது
4tamilmedia. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக