January 26,
2013 02:05 pm
பாகிஸ்தானில் வடமேற்கில் ஆப்கானிஸ்தான் எல்லையில் கைபர்
மலைப் பகுதி உள்ளது.
இங்குள்ள திரா பள்ளத்தாக்கின் பெரும்பாலான கிராமங்கள் தலிபான் மற்றும் அன்சருல் இஸ்லாம் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில்
உள்ளன.
இங்கு அவர்கள் தீவிரவாத முகாம்களை அமைத்து பயிற்சியில் ஈடுபட்டு
வருகின்றனர். மைதான்
என்ற கிராமம் தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை கைப்பற்றுவதில் தலிபான் மற்றும் அன்சருல் இஸ்லாம்
தீவிரவாதிகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. நேற்று முன்தினம் மாலை தொடங்கிய
துப்பாக்கி சன்டை
தொடர்ந்து நடந்தது.
நேற்று
இரவு வரை நடந்த சண்டையில் மொத்தம் 53
பேர் பலியாகினர். அவர்களில் 30பேர் தலிபான் தீவிரவாதிகள். 23
பேர் அன்சருல் இஸ்லாம் அமைப்பை சேர்ந்தவர்கள். இருபிரிவினருக்கு இடையே நடந்த சண்டையில மைதான் கிராமத்தின்
4முக்கிய இடங்களை கைப்பற்றியதாக அன்சருல் இஸ்லாம் அமைப்பு
தெரிவித்துள்ளது.
அங்குள்ள மசூதிகள் மற்றும் பொது இடங்களை தலிபான்கள்
ஆக்கிரமித்துள்ளனர். மேலும்,
மதத்தின் பெயரால் அப்பாவி பொது மக்களை கொன்று
குவிக்கின்றனர். எனவே, அவர்களை
அங்கிருந்து விரட்டியடிக்கவே துப்பாக்கி சண்டை நடத்தியதாகவும் கூறினர்.
thamilan. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக