குடும்ப தகராறில் 4 வயது மகளை அடித்து பிரிட்ஜில் அடைத்த தந்தையை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் நாராயணபுரத்தில் குடும்பத்துடன் வசிப்பவர் பாஷா. இவருக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். இந்நிலையில்,
மகளை அடித்து, உதைத்து பிரிட்ஜில் வைத்து மூடினார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர், திரண்டு வந்தனர். பிரிட்ஜில் இருந்த குழந்தையை மீட்டனர். பின்னர் பாஷாவை கடுமையாக தாக்கி, போலீசில் ஒப்படைத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, பாஷாவை கைது செய்தனர். தந்தை அடித்ததில் காயமடைந்த சிறுமி, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். கைது செய்யப்பட்ட பாஷாவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக